Saturday, August 16, 2008

நான் 1941 மாடல். நீங்க?

டாக்டர் : ஒரு சின்ன வேலைக்கா இவ்வளவு சார்ஜ்?

கார் மெக்கானிக் : நீங்கள் ஒரே மாடலில்தான் வேலை செய்கிறீர்கள். ADAM மாடலுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் நான் அப் டு டேட் ஆக இருக்க எவ்வளவு படிக்கணும். தினம் ஒரு புது கார் வந்துகொண்டிருக்கிறது. அதான்.

சில நாட்கள் கழித்து.

மெக்கானிக்
: என்ன டாக்டர், ஹார்ட் ஆபரேஷனுக்கு இவ்வளவு ஃபீஸா? நான் கார் இன்ஜினைப் பிரித்து பிஸ்டன், வால்வ் எல்லாம் மாற்றினாலும் இவ்வளவு ஆகாதே.

டாக்டர் : நான் ஹார்ட் வேலை செய்து கொண்டிருக்கும் போதே செய்கிறேன். நீ இன்ஜின் ஒடிக்கொண்டிருக்கையில் பிஸ்டன் மாற்றுவாயா?

7 comments:

நானானி said...

ஹய்!!மீ த ஃபஸ்ட்!!!

நானானி said...

நெத்தியடி!!சகாதேவன்!
டாக்டருக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யுது.

ராமலக்ஷ்மி said...

:) :) நல்ல நகைச்சுவை. கூடவே தெரிவது இரண்டு துறையிலும் சார்ஜ் என்றைக்கும் போறவங்க பர்ஸை.. இல்லல்ல இப்பல்லாம் கார்டுதானே, பாங்க் பாலன்ஸை ஏவ் ஏவ்தான்:)!

Anonymous said...

Super

நானானி said...

கார்டைக்கூட ஜாக்கிரதையாக உபயோகிக்கணும், ராமலஷ்மி!
அதில் நடக்கும் தில்லுமுல்லுகளைக் கேட்டால் பயமாயிருக்கு.

சகாதேவன் said...

நன்றி
நானானி, ராமலக்ஷ்மி,அனானி.
எப்போதோ படித்தது.
இன்னும் தருகிறேன்

goma said...

top gear joke.
மெடிகல் காலேஜ் வாத்தியார்:
மனித உடல் ஒரு மோட்டார் வண்டியை போன்றது.
மெக்கானிகல் வகுப்பறையில்:
மோட்டார் வண்டி ஒரு மனித உடல் போன்றது.
[இது என் இஞ்சினுக்குள்ளிருந்து புறப்பட்டது]