Tuesday, August 5, 2008

"ப்ரிட்டிஷ் முறையில் அமைந்துள்ள சட்டத்தையும், நடைமுறைகளையும்.....

...... இந்திய நிலைமைக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்றார்ப்போல மாற்றி அமைக்க வேண்டும். சட்டம் சாதாரண மனிதன் கூட படித்து புரிந்து கொள்ளுமாறு இருக்க வேண்டும்"

என்று 04/08/1958 அன்று, ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தபோது அவர் மேலும் சொன்னார்,

"நாட்டின் உடனடி தேவை, தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்குதலும், கோர்ட் செலவு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும். நாட்டின் ஒரு நிரந்தர உறுப்பாக விளங்கும் சட்டமுறைக்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் எல்லா ஹைகோர்ட் நீதிபதிகளுக்கும் என் பாராட்டுக்கள்."
நன்றி- தி ஹிண்டு, 04/08/08

ஐம்பது ஆண்டுகள் ஆகியும் எந்த மாறுதலும் ஆனதாக தெரியவில்லையே. நாட்டின் ஒரு முதல்வருக்கெ அரசு நியமித்த சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள், உரிய காலத்தில் தகவல்
தராததால் சங்கடம்.

5 comments:

ராமலக்ஷ்மி said...

//நாட்டின் உடனடி தேவை, தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்குதலும், கோர்ட் செலவு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும்.//

//ஐம்பது ஆண்டுகள் ஆகியும் எந்த மாறுதலும் ஆனதாக தெரியவில்லையே.//

மிகச் சரி. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இது உடனடித்தேவையாகவேதான் இருக்கப் போகிறது.

வழக்கு போட்டால் நம் வாழ் நாளில் முடியுமா என்பதே பலரின் ஐயமாய் உள்ளது.இதனால் பெருகி வரும் கட்டப் பஞ்சாயத்துக்கள் ஒரு பக்கம்.

சகாதேவன் said...

ராமலக்ஷ்மி,
இனி ஐ.டி, மருத்துவம் பொறி இயல், சட்டம், இலக்கியம் படித்தவர்கள்தான் எம்.எல்.ஏ, எம்.பி ஆகி சம்பந்தப்பட்ட இலாகா மந்திரி ஆகலாம் என்று வந்தால் நல்லது நடக்கலாம்.

ராமலக்ஷ்மி said...

//இனி ஐ.டி, மருத்துவம் பொறி இயல், சட்டம், இலக்கியம் படித்தவர்கள்தான் எம்.எல்.ஏ, எம்.பி ஆகி சம்பந்தப்பட்ட இலாகா மந்திரி ஆகலாம் //

முற்றிலும் உண்மை.ஆனால் //என்று வந்தால்//என்பதும் கூடவே தொக்கி நிற்கிறதே!

நாட்டுக்கு நல்லது செய்ய படித்திருக்க தேவையில்லை, அந்தத் தலைவர் படித்திருந்தாரா, இந்தத் தலைவர் படித்திருந்தாரா என கேள்வி எழுப்புபவரெல்லாம் அவர்கள் குறிப்பிடும் தலைவர் யாவரும் தன்னலம் அற்றவராய் நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டவராய் வாழ்ந்தனர் என்பதை மறந்து விடுவர்.

சகாதேவன் said...

நீங்கள் சொல்லும் அந்தத் தலைவர், இந்தத் தலைவரெல்லாம் இலாகாவில் நிபுணர்களை மதித்து அவர்கள் ஆலோசனை படி நடந்திருப்பார்கள்.

ராமலக்ஷ்மி said...

//நிபுணர்களை மதித்து//

இன்றைய கால கட்டத்தில் அத்தகைய "மதிப்பு" கூட அவர்களுக்கு உரிய விதத்தில் தரப் படுவதில்லை என்பதும் ஒரு சோகம், ஒரு சில விதி விலக்குகள் உண்டெனினும்.