Thursday, September 4, 2008

செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம்

ஹாப்பி நியூ இயர், ஹாப்பி தீபாவளி, ஹாப்பி பொங்கல் என்று வாழ்த்துவது போல ஹாப்பி டீச்சர்ஸ் டே என்று சொல்ல முடிகிறதா?மாணவ மாணவிகளும் ஹாப்பியாக இல்லை, டீச்சர்களும் ஹாப்பியாக இல்லை. மாணவர்களுக்கு டைட் சிலபஸ், ஹோம் ஒர்க், விளையாடக்கூட நேரமில்லாமல் படிப்பு, கம்ப்யூட்டர், கிடைக்கும் நேரத்தில் டிவி.
டீச்சர்கள், பைக்/கார் வாங்கியதில் ட்யூ கட்டவும், வீடு வாங்க/கட்ட பெற்ற லோனுக்கு ட்யூ கட்டவும், என்ன சம்பளம் வந்தாலும் ப்ரெஷர்.மேலும், டிவி/சினிமா பார்த்து ஒழுக்கம் கெட்டு வரும் மாணவர்கள், மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் பற்றி செய்திகள் படிக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ல் நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் அவர் பிறந்தநாளான 5/9ஐ கொண்டாட அனுமதி கேட்டார்களாம். அதற்கு அவர், என் பிறந்தநாள் என்பதைவிட ஆசிரியர் தினம் என்று சொல்லுங்கள் என்றாராம். தான் பார்த்து வந்த தொழில் மீது அவர் காட்டிய மரியாதையால், ஆசிரியர்களுக்கு அவர் தந்த கெளரவம் அது.
அரசு இன்று நல்லாசிரியர் விருது வழங்கி ஆசிரியர்களை பாராட்டினாலும், ஒரு பெண் கல்வி அதிகாரி பள்ளி வந்து சம்பந்தமில்லாத கேள்விகள் மாணவிகளிடம் கேட்டு சரியான பதில் சொல்லவில்லையென்று இளம் பெண் ஆசிரியையை மாணவிகள் முன்னிலையில் கன்னா பின்னா என்று திட்டியதால் அந்த ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார் என்பது சமீபத்தில் வந்த செய்தி.
அரசு இலவச டிவி, இலவச சைக்கிள் வழங்கி விளம்பரம் தேடுவதை விட்டு, வியாபாரமாகி விட்ட கல்வியை முறைப்படுத்தி வருங்கால இளைஞர்களை நாட்டின் சிறந்த குடிமகன்களாக-ஸாரி சிறந்த பிரஜைகளாக- உருவாக்க வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று அசெம்பிளியில் (சட்டசபையில் இல்லீங்க, பள்ளி தொடங்குமுன் ப்ரேயர் எல்லாம் சொல்வார்களே அப்போ) மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மீண்டும் ஒரு நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்

6 comments:

goma said...

ஆசிரியருக்கு மரியாதை, என்பதெல்லாம், கனவாகிப் போன ,கனாக் காணும் காலம் இது.
உங்கள் வலை இதழுக்கு ,வெடிவால் என்று பெயரிட்டு, பள்ளி ஆசிரியரை நினைவு கூர்ந்தீர்கள்.
நானானி,தன் தலைமை ஆசிரியை கூறிய 'ப்ரிட்டி டு வாக் வித்,விட்டி, டு டாக் வித்'என்ற வாக்கியத்தை தளத்தில் சொல்லிவருகிறார்.ஆசிரியர் தினத்தன்று ,இதனைக் குறிப்பிட்டு எழுதி, இதையே, ஆசிரியர் தின வாழ்த்தாக, அறிவிக்கிறேன்

நானானி said...

ஆசிரியர் மாணவரிடையே நல்லுறவு
பற்றி ஆதங்கப் பட்டிருந்தீர்கள். உண்மை. காரணம் ஆசிரியர்களே!
தங்களின் புனிதமான ஸ்தானத்தை தவறாக பயன் படுத்தும் சில ஆசிரியர்களால் மொத்த ஆசிரியர் ஸ்தானமே ஆடிப்போயிருக்கிறது.
முதலில் அவர்களுக்கு 'மாரல் க்ளாஸ்' எடுக்கவேண்டும்.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!

தென்றல் said...

கல்விகூடங்கள் வியபாரமாகிவிட்ட நிலையில் அரசாங்கத்துக்கும் பொறுப்பில்லை...பெற்றோர்களுக்கும் அக்கறையில்லை...

சகாதேவன் said...

தென்றல் வந்து என்னைத் தொடும்
பாட்டு நினைவு வருகிறது
உங்கள் கமென்ட் படித்ததும்.
வாருங்கள்

தென்றல் said...

ஐயா,

Google Reader மூலம் உங்கள் வலைப்பூவை படிப்பதுண்டு.

மறுமொழி போட சோம்பேறித்தனம்...;)

Anonymous said...

People should read this.