Monday, June 15, 2009

இப்போ வீட்டிலே கிடைக்கும்

மெல்லிய சருமம், புன்னகை, தன்னம்பிக்கை எல்லாம். இதையெல்லாம் பெண்கள் வெளியே வாங்கிக் கொண்டிருந்தார்களா? முன்பு அம்மா சொல்லியபடி குளித்து மஞ்சள் பூசி, வாரம் இருமுறை எண்ணை தேய்த்து சியக்காய் போட்ட போதும் மேலே சொன்னதெல்லாம் பெண்களுக்கு வீட்டிலேயே கிடைத்ததே.

டிவியில் ஒரு விளம்பரம். வீட்லே கிடைக்கும். VEET புதிதாக வந்த ஒரு க்ரீம்.
எத்தனை க்ரீம், ஷாம்பூ, எத்தனை டூத் பேஸ்ட்?

உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா? விமானத்துக்குள்ளே காமிரா, வீடியோவுடன் ஒரு பெண் வந்து பயணியிடம் கேட்டார். அடுப்புக்கரியில் உப்பை பொடித்து கலக்கி அம்மா/பாட்டி தந்தார்கள் பல் தேய்க்க.

7 comments:

ராமலக்ஷ்மி said...

நன்றாகச் சொன்னீர்கள்.

//அடுப்புக்கரியில் உப்பை பொடித்து கலக்கி அம்மா/பாட்டி தந்தார்கள் பல் தேய்க்க.//

பயத்தம்பருப்பை மாவாய் திரித்துத் தேய்த்துக் குளிக்கத் தந்தார்கள்.

கற்றாழையில் சாறெடுத்து எண்ணெயுடன் காய்ச்சி கேசம் வளரத் தந்தார்கள்.

இப்படி எத்தனையோ. இப்போ புன்னகை தன்னம்பிக்கை எல்லாம் வாங்க மகளை கடைக்கு அனுப்பி விட்டு டிவியில் அம்மாக்கள் ’எதை வாங்குவாளோ மகள்’ எனத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

பழைய பக்குவங்கள், பழக்கங்கள் நின்று போய் விட்டன அல்லது குறைந்து விட்டன என்றாலும் இந்த விளம்பரங்கள் எப்போதும் மிகைப் படுத்தப் பட்டவைதான், இல்லையா?

goma said...

இன்று நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும்,ஒவ்வொரு அசைவும் நாம் இழந்த அந்த பால பருவத்தை எப்படியெல்லாம் நினைவு படுத்துகிறது பாருங்கள்.

ராமலக்ஷ்மி said...

மிகை என்றது அந்த ஹமாம் மாதிரியான விளம்பரங்களை!
மற்றபடி நீங்கள் சொன்னமாதிரி
“டூத் பேஸ்டில் உப்பு இருக்கா? ”
எல்லாம் “அடப் போப்பா” வகைதான்:)!

சகாதேவன் said...

நன்றி கோமா, ராமலக்ஷ்மி.
விளம்பரமே மிகைப்படுத்தினால்தான் மக்கள் மனதில் பதியும் என்று செய்கிறார்கள். எனக்கு அந்த டண் டணா டண் ரொம்ப பிடிக்கும்.

நானானி said...

எனக்கு...500கிராம் வாங்கினால் 50கிராம் ஃப்ரீதான் பிடிக்கும்.

வேறேதும் புலம்பத் தோணலை.ப்புரிச்!

ராமலக்ஷ்மி said...

//எனக்கு அந்த டண் டணா டண் ரொம்ப பிடிக்கும்.//

அதிலே நடித்திருக்கும் இருவரது முகபாவமும் அசத்தலாக இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது:)!

வல்லிசிம்ஹன் said...

அதுவும் இந்த சோப் வாயிண்டு வரயாம்மா விளம்பரம் இருக்கே.
\
அபத்தத்தின் உச்சி.
ஹமாம் இல்லாட்டா அவ பொண்ணுக்குத் தன்னம்பிக்கை போய் விடுமாம். என்னப்பா இதெல்லாம்.
ரமலக்ஷ்மி எனக்கும் அந்த சன் ,டண்டணாட்டன் பிடிக்கும்:) மகா குசும்பு