என்னை யாராவது 32 கேள்விகளுடன் அழைப்பார்கள் என்று பார்த்தேன்.. பிரதாப் பெஸ்கி தன் பதில்கள் எழுதிவிட்டு, . வேற யாரையும் கூப்பிடும் அளவு பழகலே என்றார். பழகலாம் வாங்கனு எழுத நினைத்தேன். அப்புறம் மதுமிதா தன் தொடரில் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்லிவிட்டார். அப்போ கேள்வி வெளியான மாதிரிதானே. அதான் தொடர்கிறேன்.
1. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
சகாதேவனா? ஐந்து சகோதரர்களில் நான் கடைக்குட்டி என்பதால் நானே வைத்துக்கொண்ட புனை பெயர்.
பி யு சி முதல் க்ளாஸில் தமிழ் ஆசிரியர் திரு.ஜகந்நாதன், மாணவ்ர்களை சுய அறிமுகம் செய்து கொள்ள சொன்னார். என் பேரைக் கேட்டதும், 'வடிவேல் முருகன் - அழகான பெயர்' என்றார்.
பள்ளியில் என் ஆசிரியர் நான் சேட்டை பண்ணினேன் என்று, 'நீ வெடிவால் முருகன் ' என்றார். அதுதான் வலைப்பூவுக்கு பெயர்.
2. கடைசியாக அழுதது எப்போது?
சினிமாவில் உருக்கமான காட்சிகளில் கூட கண்கள் பனிப்பது உண்டு.
3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
அப்ஸரா பென்சில் விளம்பரத்தில், கணக்கில் கையெழுத்துக்காக 105/100 வாங்குவானே, பார்த்தீர்களா?
நான் 3 வது ஃபார்ம் படிக்கும்போது ஹிந்தி உண்டு. வகுப்பு பரீட்சையில் 10 கேள்விகளையும் அப்படியே எழுதினேன். ஹிந்தி பண்டிட் திரு சர்மா, உன் அழகிய கையெழுத்துக்காக 8/100 மார்க்னு சொல்லி என் விடை(?) பேப்பரை தந்தார்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
மிளகுடன் முருங்கைக்காய் அல்லது பிஞ்சு கத்திரிக்காய், முருங்கைக்கீரை போட்டு வீட்டில் குழம்பு செய்வார்கள். புளியில்லாக்கறின்னு பேர். அது ரொம்ப பிடிக்கும். ரெசிபி வேணுமா? தாமரையை கேட்டு எழுதுகிறேன்.
5. நீங்கள் வேறு யாருடனும் உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இப்பத்தான் பழகலாம் என்று பெஸ்கியை அழைத்திருக்கிறேன். நட்புக்கு வயது தடை இல்லையே. வலை நண்பராக வச்சுக்குவேன்
6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்க பிடிக்குமா?
ஷவரும் அருவிதானே.
7. முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
நடை, உடை, பாவனை. இதைத்தான் பாடி லாங்வேஜ் என்பார்களோ?
8.உங்க கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காதது என்ன?
எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க நினைப்பது. ஆனால் முடிய வில்லை. பிடிக்காதது, எதையும் உடனுக்குடன் செய்யாதது. Procrastination.
9. உங்க சரிபாதி கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் எது. பிடிக்காத விஷயம் எது?
சரி பாதியா? நல்ல பாதி- better half. அவளுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். பிள்ளைகளை வளர்த்தது போலவே பேரன்பேத்திகளை கவனித்துக்கொள்கிறாள். பிள்ளைகளை சாப்பிட வைப்பது போலவே எனக்கும் சாதம் பரிமாறும்போது சண்டைதான்.
10. யார் பக்கத்தில் இல்லாததற்கு வருந்துகிறீர்கள்?
நான் நினைப்பவர்கள் எல்லோரும் என் பக்கத்தில்தான் (மனதில்) இருக்கிறார்கள்
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்
நான் வீட்டிலிருந்துதான் எழுதுகிறேன். வேஷ்டி, நீலச்சட்டை.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க?
பேத்தி மதுமிதா டிவி பார்க்கிறாள். தாமரை யு ட்யூபில் சங்கீதம் கேட்கிறாள்.
நான் டிஸ்னி சானல் பார்த்து, ராதா ஜயலக்ஷ்மி பாடும் 'பண்டு ரீதி..' கீர்த்தனை கேட்டுக்கொண்டு எழுதுகிறேன். நான் எப்பவும் பேப்பரில் எழுதி, திருத்தி, எடிட் பண்ணித்தான் டைப் செய்வேன்.
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
என்ன கலர் பிடிக்கும் என்று நேராக கேட்டிருக்கலாம். மெல்லிய க்ரே(சிமெண்ட் கலர் சொல்லலாமா) எப்ப சட்டை பாண்ட் துணி வாங்கினாலும் இந்த கலரில் ஒன்று எடுப்பேன்.
14. உங்களுக்கு பிடித்த மணம்
புது புத்தக மணம்
15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? அவர்களை ஏன் பிடிக்கும்? அழைக்க காரணம் என்ன?
அ) நானானி - நான் ப்ளாக் எழுத ஆரம்பித்ததே அவரது ஆர்வம் பார்த்து தான்.
ஆ) கோமா - எதையும் எட்டி யோசித்து எழுதுபவர்.
இ) ராமலக்ஷ்மி - என் அம்மா பெயர். நல்ல எழுத்தாளினி
மூவரும் என் பதிவுகளில் தவறாது பின்னூட்டம் எழுதுவார்கள்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் பிடித்த பதிவு எது?
கொஸ்டின் அவுட் ஆக்கிய பெஸ்கி, மதுமிதா( என் பேத்தி பேரும் அதுதான்) பதிவுகளை இனி படிக்கணும்
17. உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
இப்பல்லாம் இன்டோர் தான். SCRABBLE ரொம்ப பிடிக்கும். என் அண்ணன் மகளை இன்னும் ஜெயிக்க முடியவில்லை
18.நீங்கள் கண்ணாடி அணிபவரா?
படிக்கவும் எழுதவும் தேவை.
19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
ஆனந்தம், ஆஹா மாதிரி குடும்பப் பாங்கான கதை உள்ள படங்கள்
20. கடைசியாக பார்த்த படம் எது?
தியேட்டரில் பார்க்கத்தான் பிடிக்கும். இரண்டு நாள் முன்னால் டிவியில் சரத்குமார் நடித்த அரசு பார்த்தேன். கடைசியில் 'தியேட்டரில் பார்த்ததற்கு நன்றி' என டைட்டிலில் வந்தது.
21. உங்களுக்கு பிடித்த பருவ காலம் எது?
நம்மூரில் எல்லாம் HOT, HOTTER, HOTTEST என்று மூன்று பருவங்கள்தானே?
22. இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எது?
மதுமிதாவுடைய Tinkle Digest புத்தகங்கள். தந்திரி-மந்திரி கதை நல்லாவே இருக்கு.
23. உங்கள் டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
தெரியாது. கம்ப்யூட்டர் பள்ளியில் முதியோர் கல்வி உண்டா என்று கேட்டு இப்போதான் சேர்ந்தேன். D T P படிக்க ஆசை.
24. உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பாம் பாம் என்று அடிக்கும் கார் ஹார்ன். எங்க தாத்தா கார் டிரைவர் ராமலிங்கம் பிள்ளை தேவையான போது மட்டுமே பாம் பாம் என்று அழகாக அடிப்பார். பிடிக்காதது இப்போது பா.............ம்...ம் என்று பஸ்களில் கேட்கும் கதைத் துளைக்கும் ஏர் ஹார்ன்
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
தி-லி டு சிகாகோ
26.உங்களுக்கு தனித்திறமை ஏதாவது இருக்கிறதா?
அப்படி சொல்லும்படி ஏதுமில்லை. சுமாராக படம் வரைவேன்
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியத ஒரு விஷயம்
கம்ப்யூட்டர் வந்தால் ஆபீசில் 10ல் 4 பேருக்கு வேலை போய்விடும் என்று முதலில் பயந்தார்கள். இப்போ எல்லா துறைகளிலும் திறமை உள்ளவர்களுக்கு வேலை இல்லாமல் போய்க் கொண்டிருப்பது. டிஜிட்டல் கேமரா வந்ததும் ஸ்டூடியோக்களில் டெவலப் செய்தவர்கள், ப்ரிண்ட்/என்லார்ஜ்மெண்ட் போட்டவர்கள். ஃப்ளெக்ஸ் வந்ததும் ஹோர்டிங்-ல் படம் வரைந்தவர்கள், எழுதியவர்கள். இப்படி எத்தனை பேர்.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்
சாதுதான் நான்.
29. பிடித்த சுற்றுலா தலம்.
எல்லா தலங்களும் பிடிக்கும்
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே இருந்தால் போதுங்க.
31. மனைவி/கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்
ஒரு ரவுண்ட். காரில்தாங்க. நண்பர்களை பார்க்க போவேன்
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
தீபா வெங்கட் அன்று ராணி, மகா ராணி நிகழ்ச்சியில் சொன்னார்.
Life is the most wonderful gift. Make the most of it.
இ மெயிலில் வந்த வரிகள்.
10% of life is made up of what happens to you. 90% of life is decided by how you react.
ஒருவரை பேட்டி எடுக்கும் போது அந்த நபர் ஒரு கேள்வியை, 'இது நல்ல கேள்வி' என்று தவறாமல் சொல்வார். 32 கேள்விகளுமே நல்ல கேள்விகள். பதிவரின் குணம், விருப்பு வெறுப்புகள், ரசனை, என்று எல்லாம் சொல்ல வைக்கின்றன. தொடரை தொடங்கியவருக்கு பாராட்டுக்கள்.
22 comments:
இவ்வளவு சீனியர் பதிவரை யாரும் கூப்பிடலையா?
பயமா இருக்கும் சார்..,
32 வது கேள்ள்விக்கான பதில் சூப்பர்
வாஹ்!சூப்பர் பதிலகள் அதிலும் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் பருவகாலம் இந்த ஒரு பதில் போதும்”ஹாரி பாட்டர்” மாதிரி பிரபலம் ஆகி விடுவீர்கள்.
என்னை யாராவது அழைத்தால் நான் உங்களை அழைப்பதாக இருந்தேன்.பதிவிலும் முந்திவிட்டீர்கள்,பதிவிலும் முந்திவிட்டிர்கள்
தங்கள் அழைப்புக்கு நன்றி
கொஸ்டின் பேப்பர் அவுட் ஆனாலும் பதிலெல்லாம் நல்லாவே இருக்கு!
பதிலகள் 32ம் முத்தானவை.
உங்கள் சாது’த்தனம்,ஷவரும் அருவிதானே என்ற சாதுர்யம,எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க நினைப்பது. ஆனால் முடிய வில்லை..என்ற சரண்டர்
நான் நினைப்பவர்கள் எல்லோரும் என் பக்கத்தில்தான் (மனதில்) இருக்கிறார்கள் என்ற சகோதரத்துவம்
இப்படியே இருந்தால் போதுங்க...என்ற சந்தோஷம் அத்தனையையும் அருமையாக எடுத்துச் சொல்லிவிட்டீர்கள்..
இதற்கு பிறகும் நான் எழுதவா என்றாகி நிற்கிறேன்.
பேப்பரில் எழுதி திருத்தி அதை கணினியில் ஏற்றி வருவது தெரிந்தபின்தான் தெரிகிறது ஏன் உங்கள் பதிவுக்கு இடையில் இத்தனை இடைவெளி என்று.
தலைப்புக்கே நூற்றுக்கு நூறு:)!
எல்லாப் பதில்களும் அற்புதம்.
//'நீ வெடிவால் முருகன் ' என்றார். அதுதான் பதிவுக்கு பெயர்.//
வலைப்பூவுக்கு என எடிட் செய்திடுங்களேன்.
//சினிமாவில் உருக்கமான காட்சிகளில் கூட கண்கள் பனிப்பது உண்டு.//
ஹி, எனக்கும்.
//வகுப்பு பரீட்சையில் 10 கேள்விகளையும் அப்படியே எழுதினேன். //
அழகு அழகு:)!
//ஷவரும் அருவிதானே.//
அப்படிப் போடுங்க:)!
//நான் நினைப்பவர்கள் எல்லோரும் என் பக்கத்தில்தான் (மனதில்) இருக்கிறார்கள்//
மிக நல்ல பதில்!!
//மதுமிதாவுடைய Tinkle Digest புத்தகங்கள். தந்திரி-மந்திரி கதை நல்லாவே இருக்கு.//
இதுதான் குழந்தைகளோடு குழந்தையாவது என்பார்களோ:)?
//இப்படியே இருந்தால் போதுங்க.//
நைஸ்!
ஹி.. தொடர்ந்து தொடர் அழைப்புகளைத் தவிர்த்து வரும் என்னை அன்புடன் அழைத்திருப்பதற்கு நன்றி. உங்களைப் போலவே அருமையான பதில்கள் மனதில் வந்தால் நானும் நிச்சயம் பதிவிடுகிறேன், 'உங்களைப் கூப்பிடலாமா' என மடலிட்டுக் கேட்ட தமிழ் பிரியன், கவிநயா, ஷைலஜா மன்னிப்பார்கள் என நம்பி:)!
32 பதில்களோடு சந்திக்கிறேன்
12 மணி நேர அவகாசம் தேவை.
ஒரு நல்ல நண்பர் கிடைக்க பெஸ்கி கொடுத்து வைத்திருக்கிறார்.
நட்புக்கு வயது தடையே இல்லை .
25 வயது இளைமைப் பட்டாளத்துடன் இருக்கும் பொழுது மென்ட்டலி நாமும் இளைமையாக உணர்வோம்
75 அனுபவஸ்தர்களோடு பழகும் பொழுது ஃபிசிகலி சிறார்களாவோம்
சுரேஷ்,
சீனியர் என்றால் பயமா?
இனியவா,
பாராட்டுக்கு நன்றி.
இனியும் வா.
அன்புடன் அருணா,
யாராவது அழைத்தால் எழுத ரெடியாகவே இருந்தேன். யாரும் எழுதலாம்னு மதுமிதா சொன்னதும் இந்த டைட்டில் தோன்றியது. வருகைக்கு நன்றி.
கோமா,
கம்ப்யூட்டரில் டைப் செய்து enter க்கு பதில் backspace அடித்து சிரமப்பட்டேன். அதான் தாளில் எல்லாம் கரெக்ட் ஆனதும் அடிக்கிறேன்.
பதில்களை பாராட்டியதற்கு நன்றி.
75 வயது அனுபவஸ்தரா?
நான் 68 தான்.
ராமலக்ஷ்மி,
தலைப்புக்கே நூறா? நீங்கள் தனியாக பாராட்டிய பதில்களும் சேர்த்து எனக்கு 107/100. வலைப்பூ - திருத்தி விட்டேன். நன்றி
தங்கள் அழைப்பிதழ் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவிட்டிருக்கிறேன்.
அழைப்புக்கு நன்றி
தொடர் பதிவுகளில் பிடித்திருந்தால் யாரும் அழைக்காமல் நாமே நுழைந்து விடலாம் எப்போதும். என் திண்ணை பதிவு கூட அப்படித்தான், நானே நுழைந்து எழுதி, விரும்புபவர் தொடருமாறு விண்ணப்பித்து முடித்திருப்பேன்:)!
thank you chithappa for always mentioning about me whenever you talk about scrabble...thangai
beloved annan magal
தங்களது நட்பு கிடைத்தமைக்கு நன்றி...
சென்ற வாரம்தான் திருநெல்வேலி வந்திருந்தேன்... அடுத்த முறை வரும்போது சந்திக்க முயற்சி செய்கிறேன்.
இனிமே எனக்கு தொடர் வந்தால் அடுத்து அழைக்கப் போகும் நபர் நீங்கள்தான்.
// goma said...
ஒரு நல்ல நண்பர் கிடைக்க பெஸ்கி கொடுத்து வைத்திருக்கிறார்.//
கொஞ்சம் பயமாத்தான் இருக்கு... நா ஒரு வெளயாட்டுப் பையன்.
//சினிமாவில் உருக்கமான காட்சிகளில் கூட கண்கள் பனிப்பது உண்டு.//
உங்களுக்கு இதயம் இனித்தது உண்டா?
//இப்பத்தான் பழகலாம் என்று பெஸ்கியை அழைத்திருக்கிறேன். நட்புக்கு வயது தடை இல்லையே//
நோ பிராப்ளம்.
//புது புத்தக மணம்//
இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு... புத்தகங்கள் அதிகம் படிப்பீர்களோ?
//பதிவுகளை இனி படிக்கணும்//
கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கும், 10 ல 9 மொக்கையாத்தான் இருக்கும்.
//அரசு பார்த்தேன். கடைசியில் 'தியேட்டரில் பார்த்ததற்கு நன்றி' என டைட்டிலில் வந்தது//
கட்டாயம் அந்த படத்துக்கு போட வேண்டியதுதான்.
---
பதில்கள் அருமை.
சகாதேவன் 32 கேள்வி பதிலுக்கு வருகை தரவில்லையே ....வாங்கோ வாங்கோ
என்ன 32 கேள்விகளுக்கு சீனா அவக கூப்பிடாக...புதுகைத்தென்றல் கூப்பிட்டாக...வல்லியம்மா கூப்பிட்டாக....நேரமின்னமையால் கொஞ்சம் தாமதமாக பதிலளிப்பேன்னு சொல்லியிருந்தேன். அப்படி அளிக்கும் போது உங்களையும் கோமாவையும் கூப்பிடலாமின்னு எண்ணியிருந்தேன்.அதுக்குள் முந்திக்கிட்டீகளே!!!!நல்லாருக்கு.
//மதுமிதாவுடைய Tinkle Digest புத்தகங்கள். தந்திரி-மந்திரி கதை நல்லாவே இருக்கு.//
எனக்கும் அந்த கதைகள் பிடிக்கும் சகாதேவன் சார்..
//நம்மூரில் எல்லாம் HOT, HOTTER, HOTTEST என்று மூன்று பருவங்கள்தானே?//
- சூப்பர்...
வாங்க ஸ்வர்ணா
நன்றி.
வாங்க நானானி,
உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறேன்
சகாதேவன்
என் சகோதரன் ஹிந்தி கேள்விக்கான விடையை ஆங்கிலத்தில் எழுதி மேலே ஒரு கோடிழுத்து ஹிந்தி என்பான். அவன் கையெழுத்தும் அழகாக இருக்கும்.
நான் விட்ட பாய்ண்ட எடுத்துக் கொடுத்த்துக்கு நன்றி சகாதேவன் சார்.
Post a Comment