பகல் நேரம் கூட சிறுவர் சிறுமிகள் தூங்கிவிடுவார்கள். இப்போது பல எலக்ட்ரானிக் சாதனங்கள் - ஆடியோ சிடி, விசிடி, செல்போன், விடியோ கேம்ஸ் -எல்லாம் வந்துவிட்டன. குழந்தைகள் ஆளுக்கொன்று வைத்துக்கொண்டு தங்கள் வழியில் பிஸி ஆகிவிடுவார்கள். அது கூட கொஞ்சம் நேரம் தான். பிறகு அது போரடித்து, 'அப்பா எப்போ ஊர் வரும் என்று கேட்பார்கள்.
காரில் காஸட் ப்ளேயர் கூட வராத அந்த நாளில் என் அண்ணன் வெளியூர் செல்கையில் ஒரு விளையாட்டு சொல்வார். எதிரே வரும் கார், பஸ், லாரிகளின் நம்பர் ப்ளேட் விளையாட்டு. மோட்டார் சைக்கிள், டிவிஎஸ்50 ஆட்டோ எல்லாம் ஹைவேயில் அப்போது அதிகம் வராது. இப்போ சேர்த்துக்கலாம்.
ஐந்து பேர் இருந்தால் 0 முதல் 9 வரை பத்து எண்களை ஆளுக்கு இரண்டு எண்கள் தேர்வு செய்து அல்லது சீட்டு போட்டு எடுத்துக்கணும்.
(உ-ம்: A 0 - 4 : B 1 - 9: C 2 - 7: D 3 - 8: E 5 - 6)
நாலு பேர் என்றால் இரண்டு எண் சாமிக்கு. எல்லோரும் விழிப்புடன் பங்கு பெரும் நல்ல விளையாட்டு.போட்டியில் ஆர்வம் உள்ள சிறுவர் சிறுமியர் ரசித்து விளையாடுவார்கள்
எதிரே வரும் வண்டியின் நம்பர் ப்ளேட்டை பார்த்து கடைசி எண் ( ஒன்று ஸ்தானம்) தன் எண் இரண்டில் ஒன்றாக இருந்தால் சொல்ல வேண்டும். அவர் பார்க்க தவறி விட்டால் பாயிண்ட் இல்லை. தங்கள் எண்ணை தாங்களே பார்த்து சொல்ல வேண்டும். விளையாட்டென்றால் விதிகள் உண்டல்லவா.
1. எதிரே வரும் வண்டிகளின் நம்பர் மட்டும்தான். வண்டி நின்று கொண்டிருக்கக் கூடாது.
2. 1485 வந்தால் E க்கு 1 பாயிண்ட். 1330 வந்தால் A க்கு 1 பாயிண்ட்.
3. போனஸ் பாயிண்ட்ஸ்-
1955 வந்தால் E க்கு 2 பாயிண்ட். 3வதும் 4வதுமாக வரணும்.
இது போல மற்ற டபுள் எண்கள் வந்தாலும் 2 பாயிண்ட்.(6700, 1411, )
4000 வந்தால் A க்கு 3 பாயிண்ட்.( 1222, 5666)
8888 வந்தால் D க்கு 4 பாயிண்ட் (4444, 7777)
போனஸ் பாயிண்ட் கிடைக்கையில் எல்லோருக்கும் படு குஷி.
சென்ற மாதம் நான், நண்பர், கோவையில் கல்லூரியில் சேர்ந்திருக்கும் அவர் மகளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு நாங்கள் ஒரு மீட்டிங்க்காக சென்றோம். கார் டிரைவர்தான் நாலாவது ப்ளேயர்.
அகலமான நாலு வழி சாலையாவதால் எதிர் வரும் கார்களின் வேகத்தாலும் நம்பர் ப்ளேட்டை பார்க்க முடியவில்லை. நம்பருக்கும் thicknss, உயரம் இவ்வளவு இருக்கணும் என்று விதி உண்டு. இப்பல்லாம் இஷ்டப்பட்ட fontல் பல சைஸ்களில் எழுதுகிறார்கள்.முடிந்த இடங்களில் விளையாடிப் பாருங்கள்
4 comments:
//கார் டிரைவருடன் நாலு பேரும் விளையாடினோம். //
இது கொஞ்சம் டேஞ்சர் :-)
சாலையில் டிரைவர் கவனம் சிதறாமல் அவர் நம்பர்களை நான் தான் பார்த்து சொன்னேன்
ஹையோ! கொசுவத்தி...கொசுவத்தி சுத்த வச்சுட்டீங்களே..சகாதேவன்!
இந்த விளையாட்டு என் அப்பா சொல்லிக் கொடுக்க விளையாடிருக்கிறேன் அண்ணன்மாருடன். இது போல நாங்கள் பள்ளி செல்லுகையிலும் விளையாடியிருக்கிறோம் குறைந்த தூரம்தான் என்றாலும். ஒரு வண்டியில் 10 பேருக்கு குறையாமல் இருப்போம். நாங்களே அரை டிக்கெட். கால் டிக்கெட்டுகளுக்கு விளையாட்டில் அனுமதி இல்லை:))!
Post a Comment