என்னங்க, மணி 7 ஆகுது. 8 மணிக்கு எங்கேயோ போகணும்னீங்களே, எந்திரிங்க என்று தாமரை எழுப்பினாள்.
நான்: இது காலையா? சாயங்காலமா?
அவள்: நாம யு.எஸ்சிலிருந்து வந்து 7 நாள் ஆச்சு. இன்னும் ஜெட்லாக் போகலையா
குளித்ததும் முன்னெல்லாம் ஜவ்வாது பவுடர் பூசிக்குவேன். யு.எஸ்ஸில் டியோடரன்ட் தானே. ஸ்ப்ரே பண்ணி, சட்டை போட்டு சாப்பிட வந்தேன். வேறென்ன இட்லிதான்.
நான்: சட்னி ஒரே ஹாட் ஆக இருக்கே?
அவள்: நீங்கள் குளிக்கப்போகும்போதே தாளித்து விட்டேனே. ஆறியிருக்கும்.
நான்: சூடுன்னு சொல்லலே. காரமாக இருக்கு. ப்ரெட் தந்திருக்கலாம்.
அவள்: பட்டர் இல்லை. வாங்கி வாருங்கள்.
புறப்பட்டதும் பேத்திகள், இன்னிக்கு எங்களுக்கு லீவு. நாங்களும் வருவோம் என்றார்கள்.
சாயங்காலம் போகலாம். நான் வரும்போது உங்களுக்கு candy, cookie எல்லாம் வாங்கி வரேன்னேன்.
ஷிவானி: அதெல்லாம் வேண்டாம். எனக்கு சாக்லேட்தான்.
ஸ்ரீநிதி: எனக்கு பிஸ்கட்.
நான்: நானும் அதான் சொன்னேன். வாங்கி வரேன்
ஆபீஸ் வந்தேன். சோமு(மகன்) புது பஸ்ஸுக்காக சாஸிஸ் கொட்டேஷன் Rs.10,00,000/- காட்டினான். "அடேயப்பா இப்ப 1 மில்லியன் ரூபாயா? இன்னும் பாடி கட்ட 1/2 மில்லியன் ஆகுமே. பஸ்ஸெல்லாம் ஸ்கெஜூல்(schedule) படி ஓடிக்கொண்டிருக்கிறதா? . அப்பா யு.எஸ் ரிடர்ன்ட். கொஞ்சநாள் இப்படித்தான் பேசுவார்னு நினைத்திருப்பான்.
கணேசன் வந்து நான் எழுதித் தந்த லெட்டரைக் காட்டி, தேதி தப்பா இருக்கு. 13 மாதமா என்றான் - 08/13/2009. ஓஹோ, அமெரிக்க ஸ்டைலில் எழுதிவிட்டேன், இந்தா 13/08/2009 என்று திருத்தி தந்தேன். கணேசா, நீ ஜங்ஷனுக்கு தானே போகிறாய். இந்த 2 லெட்டரையும் A to Zeeயில் ஜெராக்ஸ் எடுத்து வா. சார், ஏ டு இஸட் ஜெராக்ஸ் கடைதானே உண்டு என்றான். அதான் அதான், யு.எஸ்ஸில் Z ஐ Zee என்று தான் சொல்வார்கள்.
12 மணிக்கு பாளையங்கோட்டையில் நண்பரைப் பார்க்கப் போனேன். அவர் என்னிடம் பெப்ஸியா, மிரிண்டாவா என்றார். நான் டயட் கோக் கிடைக்குமா. யு.எஸ்ஸில் எல்லோரும் ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ். அதான் சொன்னேன். திரும்பும் வழியில் சங்கமம் சூப்பர் மார்கெட்டில் அமுல் பட்டர் பாக்கெட்டில் fat % எவ்வளவு என்று பார்த்து, கேன்டி, குக்கி எல்லாம் வாங்கி வீட்டுக்கு வந்தேன்
தாமரை சாப்பிட கூப்பிட்டாள். எனக்கு பசிக்கலை. யோகர்ட் சாதம் மட்டும் போதும் என்றேன். நாம இப்போ இருப்பது இந்தியாவில்தான், நினைவிருக்கட்டும் என்று சொல்லி சாதமும் தயிரும் எடுத்து வைத்தாள்.
மறுநாள் காலை குளித்ததும் கோல்ட் பிடித்து தும்மல் போட்டதும் எக்ஸ்க்யூஸ் மீ என்றேன். ஷிவானி வந்து, தாத்தா, தும்மும்போது ஈஸ்வரா என்று தானே சொல்வாய். தும்முவது தப்பா, எக்ஸ்க்யூஸ்மீங்கிறியே என்று கேட்டாள். இல்லம்மா, யு.எஸ்ஸில் எல்லாரும் இப்படித்தான் சொல்வாங்க.
பார்த்துக்கொண்டிருந்த அவள் அம்மா(மருமகள்)வுக்கு ஒரே சிரிப்பு.
நாகர்கோவிலுக்கு நான் மூன்று நண்பர்களுடன் என் காரில் புறப்பட்டேன். நான் தான் ட்ரைவிங். நேரமாச்சே செமினார் துவங்குமுன் போய் விடலாமா என்றார் ஒருவர். 50 மைல்தானே. இப்ப ஃப்ரீவே 4 லேன் ஆகி விட்டதே. ஒன் அவர் ட்ரைவிங்கில் கூட போய் விடலாம் என்றேன். யு.எஸ்ஸில் ஃப்ரீவேயில் 55 mph லிமிட். நான் போகும்போதே இன்டர்நேஷனல் ட்ரைவிங் பெர்மிட் வாங்கியிருந்தேன். சுசி(மகள்) கைடு பண்ண கார் ஓட்டி, மது ஸ்கூல் 2 மைல்தான், நானே சென்று விட்டு வருவேன். அமெரிக்கர்கள் சாலை விதிகளை எப்படி மதிக்கிறார்கள் தெரியுமா?
இப்படியாக முதல் ஒரு மாதம் யாரிடம் பேசும்போதும் "யு.எஸ்ஸில் எப்படி தெரியுமா", நான் யு.எஸ்.ஸில் இருந்தபோது..." என்றுதான்.
இன்டர்நெட்டில், யு.எஸ் சென்று வந்த இந்தியர்கள் ஒரு மூன்று மாதமாவது என்ன சொல்வார்கள், என்ன செய்வார்கள் என்று ஒரு தகவல்.
என்னையே நான் கற்பனை செய்து பார்த்தேன்.
ஊருக்குப் போனதும் என்ன செய்வேனோ?
16 comments:
ஊருக்குப் போனதும் என்ன செய்வேனோ?
உங்களுக்கு candy, cookie எல்லாம் வாங்கி வரேன்னேன்.
ஷிவானி: அதெல்லாம் வேண்டாம். எனக்கு சாக்லேட்தான்.
ஸ்ரீநிதி: எனக்கு பிஸ்கட்.
நான்: நானும் அதான் சொன்னேன். வாங்கி வரேன்....
சூப்பர்
அருமையான அனுபவித்து எழுதிய அழகான பதிவு.
வாழ்த்துக்கள்.
,ஊருக்குப் போனதும் உங்களுக்கு யூ.எஸ் ரிடர்ன் மேனியா வராமல் ஷிவானி ஸ்ரீநிதி பேத்திகள் இருவரும் நிச்சயமாகப் பார்த்துக் கொள்வார்கள்
இங்கிருந்து அங்கே போனதும் உண்டான யூ.எஸ் .ரீச்ச்டு மனோபாவம் எப்படி இருந்தது அதையும் சொல்லுங்களேன்.
//நான் போகும்போதே இன்டர்நேஷனல் ட்ரைவிங் பெர்மிட் வாங்கியிருந்தேன்//
எதற்கு இன்டர்நேஷனல் ட்ரைவிங் பெர்மிட்??? waste of money?
இந்தியன் ட்ரைவிங் லைசன்ஸ் அமெரிக்கா வரை பேசுமே!!!
Good post. It happens not only to US Return , happens to all foreign returns.
Sameway in abroad they we will say i India we used to do this way, India it will be in this way, India is better, India is growing....
I think it is human tendency to compare the present with past.
//அருமையான அனுபவித்து எழுதிய அழகான பதிவு.//
அனுபவங்கள் சுவையானவைதானே?
//யூ.எஸ் ரிடர்ன் மேனியா//
இதே போல் இங்கிருந்து யூஎஸ் போனதும் வந்த மேனியா என்ன?
அதைக் கண்ட மேனிக்கு சொல்லுங்களேன்!!!
எத்தனை "கூபான்கள்" கலெக்ட் செய்து பொருட்கள் வாங்கினீர்கள்?
"டோயோடா" கார் ஓட்டினீர்களா?
குடும்பம் மொத்தத்தையும் கூட்டிவிட்டீர்களே!!சந்தோசம்!!
வாங்க குப்பன்_யாஹூ,
நல்வரவு. உங்கள் பதிவை பார்த்தேன். Blogs I Follow வில் என் பேரும் இருக்கிறதே.நன்றி. ஒபாமா பற்றிய உங்கள் பதிவு அருமை. அதன் என் கமென்டை உங்கள் பதிவிலேயே எழுதுகிறேன்
நானானி, கோமா,
நல்லாயிருக்கா? ஈ மெயிலில் 1, 2, என்று வரிசையாகத்தான் வந்தது. அதையே நிகழ்ச்சிகளாக எழுதணும்னு, ஒரு வாரம் உட்கார்ந்து யோசிச்சு எழுதி, திருத்தி, பிறகுதான் கீ போர்டுக்கு வந்தேன். இனி அடுத்து வலையில் சிறுகதைப் போட்டியிலும் வரலாமானு தோணுது.
பாராட்டுக்கு நன்றி
//அமெரிக்கர்கள் சாலை விதிகளை எப்படி மதிக்கிறார்கள் தெரியுமா?//
அதிலும் நாம் ரோட்டை குறுக்கே கடக்க நாமே ஒரு பட்டனை அமுத்திவிட்டு காத்திருக்கலாம். நமக்காக அத்தனை கார்களும் பொறுமையாக காத்திருக்கும்.
ஆஹா...! வெடிவால் தவுசண்ட் வாலாவாக வெடிக்கப்போகிறது.
வகை வகையாக விருந்து படைக்கப் போகிறீர்கள்! ஜமாயுங்கோ.
அள்ளி அள்ளி உண்ணக் காத்திருக்கோம்.
தங்கள் ஃபாலோயர்ஸ்க்கான பட்டன் கிட்டாமல் சேர இயலவில்லை,குப்பன் வழிகாட்டினார் .
என் பதிவுகளுக்கும் இரண்டு வாசகர்களா?
மகிழ்ச்சி
அழகான பதிவு.
வாங்க டி வி ஆர்,
நன்றி
ஓஹோ! இப்படித்தான் இருப்பார்களா?
நன்றாக இருக்கு உங்க கற்பனை.
வாங்க குமார்,
நன்றி
Post a Comment