Monday, July 20, 2009

முதல் Anchorman




இந்த பெயர்(டைட்டில்)முதன் முதலில் Walter Cronkiteக்குத்தான் வழங்கப் பட்டது. ஸ்வீடன் தன் நாட்டின் ஆங்க்கர்மேனை Kronkiter என்றும் ஹாலன்டில் Cronkiter என்றும் அவர் பெயராலேயே அழைக்கும் அளவு அவர் டிவி நியூஸ் வாசிப்பதில் புகழ் பெற்றவர்.வால்டர், தன் 92 வயதில், ஜூலை 17, வெள்ளிக்கிழமை காலமானார். 1962 முதல் 1981 வரை பணியில் இருந்தாராம்.


C.B.S டிவியில் அவருடைய ஒழுங்கு, ஸ்டைல், தொழில் பக்தி, செய்தியின் தன்மையை தன் முகத்தில் பிரதிபலிக்க அவர் வாசித்ததை பலரும் நினைவு கொண்டு பத்திரிகையிலும் ஆன்லைனிலும் எழுதுகிறார்கள்.


இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்று பூர்ணம் விஸ்வநாதன் 15 ஆகஸ்ட்,1947 அன்று செய்தி வாசித்ததை நம்மால் எப்படி மறக்க முடியவில்லையோ, அதுபோல கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் சுடப்பட்டது, வியட்நாம் வார், வாட்டர்கேட், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது ஆகிய தகவல்களை அவர் சொன்ன விதம் அமெரிக்கர்களால் மறக்க முடியவில்லை.
டல்லஸிலிருந்து நவம்பர் 23, 1963 அன்று வந்த நியூஸ் புல்லட்டினைப் பார்த்ததும் வால்டர், உடனே டிவியில் நடந்து கொண்டிருந்த சோப் ஓபரா நிகழ்ச்சியின் இடையே, கென்னடி சுடப்பட்டார் என்று தழுதழுக்க சொன்னதையும், நீல் நிலவில் இறங்கியதை உற்சாகமாக சொன்னதையும் இன்று எல்லோரும் நினைவூட்டுகிறார்கள். டிவி செய்தி சொல்வது ஒரு என்டர்டெயின்மென்ட் அல்ல, தகவல் சொல்வது என்பதை நன்கு உணர்ந்தவர்.


இன்று, ஜூலை 20, அமெரிக்க சந்திராயன் (அபோலோ 11) சந்திரனில் இறங்கி 40 ஆண்டுகள் ஆனதை கொண்டாட அவர் இல்லை.


வால்டர் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.


ஒரு வாசகர் கடிதம்: நான் இப்போது டிவியில் செய்தி பார்ப்பதோ, ரேடியோவில் கேட்பதோ இல்லை. அவை வெறும் பொழுது போக்குதான். செய்திகளை ஆன்லைனில்தான் பார்க்கிறேன்.

4 comments:

குப்பன்.யாஹூ said...

டி வி எப்படி ரேடியோ வை அழித்ததோ அதைப் போல இன்று வலை பதிவுகள், இணையம் டி வி, செய்தி தாள்களை அழிக்கின்றன.

நானானி said...

சகாதேவன், இரு விருதுகள் உங்களுக்காக காத்திருக்கு, என் பதிவில். சென்று பார்க்கவும்.

goma said...

15 ஆகஸ்ட்,1947 அன்று செய்தி வாசித்ததை நம்மால் எப்படி மறக்க முடியவில்லையோ,

நாடு வீடு இரண்டிலும் நடந்த சம்பவங்களை எவ்வளவு உணர்ச்சிப் பூர்வமாக எழுதுகிறீர்கள்.
நீங்களும் ஒரு பூர்ணம் சகாதேவன்தான்

காற்று said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்