Saturday, September 19, 2009

புத்தகமா? அப்படினா என்னப்பா?

2090-ம் ஆண்டில் குழந்தைகள் இப்படி கேட்பார்களோ?


ஏட்டுச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள். மரத்தை கூழாக்கி காகிதம் செய்ய அறிந்ததும், இறகு முனையை சீவி, எழுதுகோல் செய்து மை தொட்டு எழுதினார்கள். கையெழுத்து பிரதிகள் எல்லோரையும் சென்றடைய காலதாமதமானது. அச்சு எந்திரம் கண்டு பிடிக்கப்பட்டதும், அச்சுத் தொழில் பெருகி புத்தகம் ஆனதும் , விரைவில் பல பிரதிகள் விற்பனையாளர்களையும், நூலகங்களையும் மக்களையும் அடைந்தது. முதன்முதலாக ப்ரிண்ட் ஆனது பைபிள் தான். படிக்கும் ஆர்வமும் தூண்டிவிடப்பட்டது. நிறைய எழுத்தாளர்கள் உருவானார்கள். கதை, கவிதை நாவல் என்று பல வடிவங்களில் புத்தகங்கள் வந்தன. செய்திப் பத்திரிகைகள், மாத/வார பத்திரிகை எல்லா நாட்டிலும் அச்சாகி விற்பனை ஆகிறது. படிப்பது ஒரு பொழுது போக்காக அமைந்தது. புத்தகங்கள் வாங்கி படித்தோம், நூலகம் சென்று படித்தோம்.

புத்தகம் படிக்க இப்போ எப்படியெல்லாம் தூண்டுகிறார்கள் பாருங்கள். அமேஸான் நிறுவனம் இன்று புத்தகங்கள், செய்தித்தாள்கள் எல்லாவற்ரையும் Kindle (தூண்டுதல் என்றே சொல்வோமா) மூலம் விற்பனை செய்கிறது. $399 க்கு இதை வாங்கி, அதில் நாம் விரும்பும் புத்தகத்தை $9.99 (பேட்டா விலை) டெளண்லோட் செய்து கொள்ளலாம்



அதன் சைஸை பாருங்களேன்






பென்சில் கனம்தான்


தினசரிகளுக்கு அதற்குரிய சந்தா கட்டினால், தினம் காலையில் நம்பர் ஒன் பேப்பர் இன்னும் வரலையே என்று வாசலைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். தூண்டுதலில் 300 புக் பதிவு செய்து கொள்ளலம். யார் வீட்டிலும் இனி புக் ஷெல்ஃப் இருக்காது.


பயணங்களில் நிறைய புக் எடுத்துச் செல்லாமல் ஒரு தூண்டுதல் கொண்டு போனால் போதும். ஷிப் ரெக் ஆகி ஆளில்லாத தீவில் நீ இருக்க நேர்ந்தால் உனக்கென்ன வேண்டும் எனக் கேட்டால், ஒரு தூண்டுதல் போதும் என்பான் புத்தகப்புழு.

கனடாவில் ஒரு புக் ஷாப் முன் உள்ள படிப்பாளி சிலை

டிவி வந்ததும் படிப்பது குறைந்தது. கம்ப்யூட்டர், இன்டெர்நெட் எல்லாம் வந்ததும் செய்திகள் விரைவில் உலகம் முழுக்க பரவ முடிகிறது.

9/11 நிகழ்ச்சியை முதன்முதலில் உலகறிந்தது இன்டெர்நெட் மூலம்தான். வலைப்பதிவில் இன்று நாம் தினம் எழுதுகிறோம். ஆயிரக்கணக்கானவர்கள் அதைப் ப்டிக்க முடிகிறது. இதை நாம் பத்திரிகைக்கு அனுப்பினால் அப்படியே அச்சிட மாட்டார்கள். ஆசிரியர் குழு தேர்வு செய்து அதை திருத்தி, எடிட் செய்து, சுருக்கிதான் அச்சிடுவார்கள்.

உலக புத்தக தினம், புத்தகக் கண்காட்சி எல்லாம் நடத்துகிறோம். இப்போ உலகெங்கும் விற்பனை குறைந்து வருவதாக தெரிகிறது. நம்முடைய பொறுப்பு எவ்வளவு கூடுமென்று பாருங்கள்.

டெக்னாலஜி நம்மை அன்ஃபிட் ஆக்கி விட்டதா என்று டிவி விளம்பரத்தில் ஒரு பெண் கேட்பாரே. எப்படியோ நம்மை சோம்பேறி ஆக்கி விடும் போலிருக்கிறது. இனி பாடப்புத்தகங்கள் கூட வராதோ? பள்ளிக்கு மாணவர்கள் லாப்டாப் கொண்டு போவார்கள். நோட்புக் கிடையாது. பாடப்புத்தகமெல்லாம் தூண்டுதலில் வந்து விடும். கீபோர்டிலேயே எழுதுவார்கள். இப்போ எல்லாம் நாம் பேப்பரில் எழுதுவதே குறைந்துவிட்டது.

டெக்னாலஜி நம் கையெழுத்தை மட்டுமில்லை, நம் தலையெழுத்தையே மாற்றி விடும்.

6 comments:

goma said...

வெடிவால் பதிவை வாசித்த வள்ளுவர் எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார்.
“.....கொள்ளுப் பேரன் ,டு த பவர் ஆஃப் 232, சகாதேவன்
நோட் புக்கும் பேனாவும் மறைந்து கொண்டிருக்கிற அவல நிலையை எழுதி வருத்தம் தெரிவித்திருந்தார்.
”ஏடும் எழுத்தாணியுமா” அப்படின்னா என்னப்பா ?”,என்று கேட்கும் காலம் வந்த நிலையை அவர் ஏன் எண்ணிப் பார்க்க வில்லை.
ஏடும் எழுத்தாணியும் எழுதாத எந்த காவியம் இன்று கணினியும் கீ போர்டும் எழுதுகிறது......”
வள்ளுவருக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் சகாதேவா?
தூண்டுதல் இல்லாமல் வரும் ஆர்வமே நிலையான ஆர்வம் மற்றெல்லாம் அண்டுதல் அருமை இல......

goma said...

ஷிப் ரெக் ஆகி ஆளில்லாத தீவில் நீ இருக்க நேர்ந்தால் உனக்கென்ன வேண்டும் எனக் கேட்டால், ஒரு தூண்டுதல் போதும் என்பான் புத்தகப்புழு.

முதலில் ஒரு தூண்டில் கேட்பான் பிறகுதான் தூண்டுதல் .

goma said...

நல்ல பதிவு

ராமலக்ஷ்மி said...

வள்ளுவத்திலிருந்து வள்ளுவரின் மெயிலாக சுமந்து வந்து கோமா கேட்டிருக்கும் கேள்வியும் நன்றாக இருக்கிறது:)!

Jokes apart, இந்தியாவில் சந்தையில் விற்பனையில் இருக்கும் சோனியின் ஈ-புக்கில் கின்டில் வசதி கிடையாது. புத்தகங்களை அதில் அப்லோட் செய்து கொள்வது வாங்குபவர் பாடு. அமேசான் நிறுவனம் இங்கே ஏர்டெல் போன்ற நிறுவனத்துடன் கைகோர்த்து கின்டில் வசதியை கொண்டு வந்தால் பயனாய் இருக்கும்.

இரு தினங்களுக்கு முன்னர் கூகுள் புத்தக் சேவையை ரிவர்சில் கொண்டு வந்துள்ளது:)! அவர்களது பட்டியலில் இருக்கும் ஈ-புக் எதையேனும் நான் ஆர்டர் செய்தால் புத்தகமாய் அச்சிட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கும்.

ராமலக்ஷ்மி said...

சின்ன திருத்தம். ‘நான்’ அல்ல, 'நாம்' யார் ஆர்டர் செய்தாலும் கூகுள் அனுப்பிவைக்கும், of course பணம் கட்டணும்:))!

சகாதேவன் said...

கோமா ,
தாத்தா டு த பவர் ஆஃப் 232, வள்ளுவருக்கு ஒரு ஸாரி சொல்லிடுங்களேன்.

ராமலக்ஷ்மி,
நீங்கள் ஸோனி ஈ புக் வாங்கிட்டீங்க, சரிதானே. நல்லா படிங்க.