Friday, September 25, 2009

"சினந்தென்னை அடித்தாலும் பரிந்தென்னை அணைத்தாலும்......."

இன்று பகல் டிவியில் ஜெமினியின் இரும்புத்திரை படம். இது எத்தனை தடவை பார்த்து விட்டீர்கள். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்றாள் தாமரை. முதலில் ஒரு பாட்டு வரும். அதை கேட்டு விட்டு வந்து விடுவேன் என்றேன். நல்லா இருக்கே, யார் பாடியதுனு கேட்டாள்.



என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே , என்னை நீ
என்ன செய்தாலும்...

சின்ன வயது முதல் உனை நம்பினேனே
சினந்தென்னை அடித்தாலும்,
பரிந்தென்னை அணைத்தாலும்
என்ன செய்தாலும்...

முன்வினையால் இன்பதுன்பங்கள் விளைந்தாலும்
மூடமதி கொண்டு உன்னை நோவதென் பேதமை
என்விதியால் இடர் ஆயிரம் சூழினும், எல்லாம்
உன் திருவிளையாடல் என்றெண்ணி நீ
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே


இசை: எஸ்.வி.வெங்கட்ராமன்
பாடியது: ராதா ஜெயலக்ஷ்மி
எழுதியவர்: கொத்தமங்கலம் சுப்பு

சிடி கிடைத்தால் கேட்டுப் பாருங்களேன்

8 comments:

ராமலக்ஷ்மி said...

//சின்ன வயது முதல் உனை நம்பினேனே
சினந்தென்னை அடித்தாலும்,
பரிந்தென்னை அணைத்தாலும்
என்ன செய்தாலும்...

முன்வினையால் இன்பதுன்பங்கள் விளைந்தாலும்
மூடமதி கொண்டு உன்னை நோவதென் பேதமை
என்விதியால் இடர் ஆயிரம் சூழினும், எல்லாம்
உன் திருவிளையாடல் என்றெண்ணி நீ
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே//

என்ன அழகான வரிகள்! பாட்டைக் கேட்டதில்லை. சிடி கிடைக்குமா பார்க்கிறேன்.

நல்ல பகிர்வு.

goma said...

http://trc108umablogspotcom.blogspot.com/2006/12/4_20.html

இந்த லின்க் க்ளிக் செய்து கேளுங்கள்.அருமையான இசை பிளாக் ஒன்றை இதன் மூலம் உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்

goma said...

என்ன செய்தாலும் ...பாடலின் லின்க் அது

goma said...

ராமலஷ்மி சிடி தேடவேண்டாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நெஞ்சில் குடியிருக்கும்..என்ற பாடலும் அருமையாக இருக்கும்

சகாதேவன் said...

//என்ன அழகான வரிகள்!//
பார்த்தீங்களா ராமலக்ஷ்மி, பழைய பாடல்கள் மறக்க முடியாதவை.
ரிகார்ட் பதிவு பண்ண எனக்கு தெரியலே.

கோமா,
நீங்கள் தந்த சைட் போய் பாட்டு கேட்டேன். நன்றி.

டியர் டிவியார்,
ராதா ஜெயலக்ஷ்மி பாடிய எல்லா திரைப் பாடல்களும் எனக்கு பிடிக்கும்.
வருகைக்கு நன்றி.

நானானி said...

எனக்குப் பிடித்த...நான் ரொம்பவும் ரசித்து,ரசித்துப் பாடும் பாடல் இது!

நானானி said...

வீணையிலும் அழகாக இழையும்.