Friday, October 2, 2009

அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?

1951 - 56 ல் ரயில்வே மினிஸ்டர் ஆக இருந்தார். 1956ல் மஹபூப்நகரில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

02/10/1904 - 10/01/1966

பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஒப்புக்கொள்ளாததால் தொடர்ந்து பதவியில் இருந்தார். அதன் பின் 3 மாதம் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறந்ததும் பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தந்தார். அதை அங்கீகரித்த பிரதமர், பார்லிமெண்டில் இதை சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்.
1964 ல் நேரு மறைவுக்குப் பின், அன்று காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜ், லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார்.

15 comments:

Indy said...
This comment has been removed by a blog administrator.
ராமலக்ஷ்மி said...

மறக்கக் கூடாது. அருமையாக நினைவு கூர்ந்துள்ளீர்கள்! சாஸ்திரிக்கு ஒரு பெரிய சல்யூட்!

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு நண்பரே...

காந்தியடிகள் குறித்த எனது பதிவு...
http://rajasabai.blogspot.com/2009/10/blog-post.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லதொரு பகிர்வு

தங்க முகுந்தன் said...

இவரது முன்மாதிரியை யார் இப்போது செயல்படுத்துகிறார்கள்?
தகவலுக்கு நன்றி!
வாழ்த்துக்கள்!

Anonymous said...

//அன்று காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜ்//

அக்டோபர் 2 அன்று காமராஜரை மறக்கலாமோ? இன்று காமராஜ் மறைந்த நாள்.

சகாதேவன் said...

வாங்க ராமலக்ஷ்மி,
நன்றி.

துபாய் ராஜா,
வருகைக்கு நன்றி. உங்கள் பதிவை பார்த்து எழுதுகிறேன்.

வெல்கம், டி.வி.ஆர்.,
பாராட்டுக்கு நன்றி.

முகுந்தா, முகுந்தா,
ரயிலே காணாமல் போச்சு. யார் பொறுப்பு?

அனானி,
காமராஜ் மறைந்த நாள் நினைவில்லை.
இனி மறக்க மாட்டேன்.

goma said...

நல்லதொரு பகிர்வு

தங்க முகுந்தன் said...

நல்லா பாடுவீங்களோ!

சகாதேவன் said...

உங்கள் பெயரைப் பார்த்ததும் முகுந்தா பாட்டு நினைவு வந்தது.

புருனோ Bruno said...

நல்லதொரு பகிர்வு

நன்றி

நானானி said...

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த விபத்துகளுக்கு தார்மீகப்(இதற்கு அர்த்தம் தெரியுமா இன்றைய அ.வாதிகளுக்கு?)பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யலாம். தடுக்கி விழுந்தால் நடக்கும் விபத்துகளுக்கெல்லாம் பதவியை துறந்தால் அவ்விடம் வெற்றிடமாகவே இருக்கும்.

சாஸ்திரி, காமராஜ் போன்ற உன்னத தலைவர்களைப் போல் இனி பிறக்க வாய்ப்பே இல்லை. அருமையான பதிவு.

ராமலக்ஷ்மி said...

இன்றைய வலைச்சரத்திலும், முத்துச்சரத்திலும் இப்பதிவு. நன்றியும் வணக்கமும்.

சாந்தி மாரியப்பன் said...

//சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்//

நல்ல தலைவர்கள் இருந்த அந்தக்காலத்தை நினைச்சா பெருமூச்சுதான் வருது.

karunganni said...

sastriji was leaving for teshkent the then chief justice was speaking ti him and asked him to take special care of his health as he had had already an attack.sastriji assired ho, bit added that he felt he might not return and was worried that his
family would be in the streets and he had to complete the loan on the car and he had no bank balance .such divines walked this country