
இன்று 90 வயதாகும் ஜேம்ஸ் தன் வாழ்வின் மூன்றில் இரண்டு பகுதியை, தான் வாழும் ஊரின் பிரபல பார்பராகவும், நாடித்துடிப்பாகவும் இருக்கிறார் என்று கூறும் அளவு பிரசித்தமானவர்.ஊரில் நிறைய மாற்றங்கள் நேர்கின்றன. புதிய தொழில்கள் தோன்றி விரைவில் மறைகின்றன. இவரது ஷாப் இந்த அறுபது ஆண்டு வளர்ச்சியில் ஐந்து இடங்களில் உள்ளன.
"நாம் யாரையும் திருத்த முடியாது. நான் ஒரு டெமாக்ரட். அதனால் என் ஷாப்பில் நாங்கள் அரசியல் பேசுவதில்லை" என்று சொல்லும் ஜேம்ஸ், "வியாபாரிகளும் நகரவாசிகளும் முன்னை போல நெருக்கமாக இருப்பதில்லை. எங்கள் பகுதியில் யாராவது இறந்து விட்டால், அவரை புதைக்கவும், அவரது வாரிசுகளுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கித் தரவும் நாங்கள் வீடு வீடாக சென்று பணம் வசூல் செய்வோம். இப்போ நாள் முழுதும் அலைந்தாலும் ஒரு சென்ட் கூட கிடைக்காது", என்று மிகவும் வருந்துகிறார்.
உடல்நிலை சரியில்லாத நிலையிலும் புதிய ஷாப்களில் உள்ளது போல் பெரிய டிவி எல்லாம் இல்லாமல் அவருடைய பார்பர் ஷாப் நடந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய நான்கு குழந்தைகளையும் கல்லூரி வரை படிக்க வைத்து ஆளாக்கி, தான் செய்யும் தொழிலை மதித்து, வாடிக்கையாளர்களை நேசித்து, அறுபது ஆண்டுகளாக நட்த்திய பார்பர் ஷாப்பை தன் தொண்ணூறாவது வயதில், அக்டோபர் 30 அன்று மூடப்போகிறார்.
நம் ஊரின் (McHenry) சரித்திரத்தில் இடம் பெற்ற ஜேம்ஸ்ஸை இனி மெயின் ரோடில் செல்லும்போது பார்க்க முடியாது என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை
என்கிறாராம் மேயர், சூஸன் லோ.
மைல் கல்லை கடந்த மேலும் இருவர்.

, Peg and Leroy Greathouse தம்பதியர், 25, ஆகஸ்ட் 1949-ல் திருமணமானவர்கள்.
தங்கள் (அறுபதாம் கல்யாணமில்லை)அறுபதாவது கல்யாண ஆண்டு விழாவை கொண்டாடினார்கள். . சினிமாவில் ஃப்ளாஷ் பேக் என்றால் ப்ளாக் & வொய்ட்-ல் காட்டுவார்களே, அது போல அன்று எடுத்த படத்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் படத்தை பாருங்கள்
தகவல்- சிகாகோ ட்ரிப்யூன்
3 comments:
நாம் யாரையும் திருத்த முடியாது அட்லீஸ்ட் முடியையாவது திருத்துகிறேனே என்று பணியாற்றிய ஜேம்ஸ்,பார்பரிலேயே முடிசூடா மன்னன்தான்
60ம் ஆண்டு மணநாள் விழா காணும் அந்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
நல்ல பகிர்வு.
60 மைல்கற்களைக் கடந்த ஜேம்ஸுக்கும் Peg and Leroy Greathouse தம்பதியருக்கும் வாழ்த்துக்கள்!
Post a Comment