Wednesday, October 28, 2009

புதிய ஓவியர் சில்பி

அன்று விகடன், கல்கி இதழ்களில் சில்பி வரைந்த கோவில்கள், சிலைகளின் படங்களையெல்லாம் பார்த்து ரசித்திருக்கிறோம். சில்பி, தான் வரைய நினைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அங்கேயே இருந்து வரைவார்.


கங்கைகொண்ட சோழபுரம்


திருவாலங்காடு சிவன் கோவில்


Autism என்பது மூன்று வயதிற்குள் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு மன வளர்ச்சி குன்றிய நோயாம். பேச முடியாத நிலை. ஆனால் தாங்கள் நினைப்பதை படம் வரைந்து வெளிப்படுத்தும் ஒரு திறமை அவர்களுக்கு உருவாகுமாம்.

Stephen Wiltshire இப்படி பாதிக்கப்பட்டவர். சிறு வயது முதலே படம் வரைவதில் கெட்டிக்காரராம். லண்டனில் வசிக்கும் இவர் பல நாடுகள் சென்று ஊரை, மனதில் படம் பிடித்து வந்து, வரைந்து தள்ளியிருக்கிறார்.



இந்த சில்பி தன்னுடைய சப்ஜெக்டை பார்த்து விட்டு, ஞாபகத்தில் கொண்டே தன் ஸ்டூடியோவில், துல்லியமாக போட்டோவை பார்த்து வரைவது போல வரைகிறார். பலநாடுகளின் நகரங்களை வரைந்திருக்கிறார்.





35 வயதாகும் ஸ்டீஃபன், தன் படங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார். படங்களை விற்று கிடைக்கும் பணத்தை நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக தருகிறார்.

நேற்றுதான் கூகுளில் பார்த்தேன். Stephen Wiltshire என்று search செய்தால் பார்க்கலாம்

சில்பி அவர்கள் வரைந்த திருநெல்வேலி மாவட்ட (அப்போ தூத்துக்குடியும் சேர்ந்தது) கோவில்கள், சர்ச், மசூதி எல்லாம் டி வி எஸ் நிறுவனம் வெளியிட்ட புத்தகம் என்னிடம் இருக்கிறது. அதையெல்லாம் பதிவிட ஆசைதான். அதற்கு அனுமதி பெற்று பிறகு செய்கிறேன். இந்த பதிவில் உள்ள சில்பி படங்கள் இரண்டும் varalaaru.blogspot.com மிலிருந்து எடுத்தேன். பதிவர்களுக்கு என் நன்றி

3 comments:

goma said...

silpiyais sethukkiya sirpi neengazh..arumaiyaana seythi.

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி. ஒருமுறை தீபாவளி மலர் ஒன்றில் பார்த்திருக்கிறேன் இப்படங்களை. அவர் ஓவியங்கள் பிரமிப்பு.

நானானி said...

பழைய விகடன், கல்கி தீபாவளி மலர்கள் முழுதும் சில்பியின் கைவண்ணத்தால்தானே நிரம்பியிருக்கும்!!!