Monday, September 27, 2010

கலைஞருக்கு நன்றி

சென்ற மாதம் நானும் மகன் சோமுவும் திருச்சிக்கு காரில் சென்றோம். நால்வழி சாலையானதும் வழியில் எல்லா ஊர்களிலும் பைபாஸ் ஆனதால் தூரம் குறைந்தது போனது. மேலும் புதுப் புது கார்கள் எல்லாம் 140 - 160 கிமீ வேகத்தில் செல்கின்றன. பைபாஸ்ஸில் ஊர்களை ஒட்டி மாற்று வழி தெரிந்து கொள்ள முடியாமல் சில வண்டிகள்/பஸ் கூட வழி மாறி நாம் செல்லும் இடது லேனில் எதிராக வருகின்றன.

மேலூர் தாண்டி சிறிது தூரத்தில் வலது லேனில் சென்ற ஒரு மஹிந்திரா ஸ்கார்பியோ கவிழ்ந்து கிடந்தது. அருகில் ஒருவர் கீழே விழுந்திருந்தார். காரின் உள்ளே எத்தனை பேர் என்று தெரியாது. கூட்டம் சேரத் தொடங்கியது. கொஞ்சம் முன்னேதான் நடந்திருக்கும். சோமு உடனே தன் செல்லில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்தான். எந்த இடம் என்று சொல்ல அந்த ஊர் பெயர் தெரியவில்லை. லைனில் இருக்கும் போதே மாங்குளத்துப்பட்டி போர்டு பார்த்தோம். சோமுவின் பெயர் விலாசம் எல்லாம் கேட்டதும் ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம் என்றார்கள்.

சில வினாடிகளிலேயே சோமுவுக்கு ஃபோன். "நீங்கள் சொன்னது போல எங்களுக்கு இன்னொரு கால் வந்தது. ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லி விட்டோம்" என்றார். என்ன ஒரு நெட்வொர்க் பாருங்கள். அடுத்த நிமிடத்தில் ஆம்புலன்ஸ் எங்கள் எதிரே விரைந்தது.
விபத்துகளில் காயமடைந்தோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால் தான் உயிர் காக்க முடியும். சன் டிவியில் அரசு விளம்பரத்தில் வரும் பெண் சொல்வாளே? அது போல நானும் மனதில் "கலைஞருக்கு நன்றி" சொன்னேன்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் மகனுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். சம்பந்தப்பட்டவர்கள் மனதுக்குள் சொல்லியிருப்பார்கள் உங்களுக்கு நன்றி.

அன்பரசன் said...

உண்மையிலே அவசரகாலத்தில் 108 ஒரு உன்னதமான விசயம்தான்.

goma said...

நானும் சொல்லிக் கொள்கிறேன் கலைஞருக்கு நன்றி

goma said...

கலைஞருக்கும் நன்றி சோமுவுக்கும் நன்றி