02/10/2010
அன்புள்ள இந்தியர்களே,
எதோ எல்லா ஊர்களிலும் அங்கங்கே நான் நின்று கொண்டிருப்பதால்
நீங்கள் என்னை மறக்கவில்லை என்று அறிய மகிழ்ச்சி.
ஜனவரி மாதம் குளித்தது. மேலெல்லாம் கசகசன்னு இருக்கு.
அப்பாடா, இன்னிக்குஎன்னை குளிப்பாட்டிட்டாங்க.
ஆளாளுக்கு ஒரு சிலைஉயர மாலை கொண்டு வந்து
என் முகத்தைக் கூட பார்க்காமல் மீடியா கேமராவைப்
பார்த்தபடி போட்டுட்டு போவாங்க. அது வாடி உதிர்ந்து
நாராகும் வரை என் தோள் வலி தாங்கமுடியாது.
ஆமா, அயோத்தி தீர்ப்பு வந்துட்டதாமே. ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே.
ராமனும் பாபரும் ஒண்ணுதான்னு சொல்லிட்டாங்க.
அடுத்த வருஷம் பார்க்கலாம்.
ஹே ராம்
என்றும் உங்கள்
10 comments:
அருமை அருமை
//எதோ எல்லா ஊர்களிலும் அங்கங்கே நான் நின்று கொண்டிருப்பதால் நீங்கள் என்னை மறக்கவில்லை என்று அறிய மகிழ்ச்சி.//
கொள்கைகளை மறந்த பின்னும் ஏதோ வருடம் ஒருமுறை கிடைக்கிற விடுமுறையாலும் இந்தமட்டும் மறக்கவில்லை மக்கள்:(!
நினைவு தினத்தன்றும் ஒருமுறை குளிப்பாரே.....
நன்றி கோமா.
ஜனவரி மறந்துவிட்டேன், திருத்தி, தலைப்பையும் மாற்றி யிருக்கிறேன்
நன்றி ராமலக்ஷ்மி.
//என் முகத்தைக் கூட பார்க்காமல் மீடியா கேமராவைப்
பார்த்தபடி போட்டுட்டு போவாங்க. அது வாடி உதிர்ந்து
நாராகும் வரை என் தோள் வலி தாங்கமுடியாது.//
நச்சுன்னு சொல்லிட்டீங்க. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காத ஒன்று. பரிசு கொடுக்கும் போது கொடுப்பவரும் வாங்குபவரும் கேமராவைப் பார்த்தால் பரிசு கீழே விழுந்து விடுமோ என்று பயப்படுவேன்.
படிக்காதவர்கள்தான் இப்படியென்றால் மெத்தப்படித்தவர்களும் அப்படியே!
என்ன..? காந்தியைப் பற்றி ஒண்ணும் சொல்லவில்லையே என்கிறீர்களா?
அதா அல்லாரும் சொல்லீட்டாங்களே? நா என்ன....த்த சொல்றது?
ரகுபதி ராகவ ராஜாராம்...!
ஹாஹாஹா சகா அருமை..:))
நன்றி, கோமா, ராமலக்ஷ்மி, நானானி.
காந்தி கையெழுத்தை நெட்டில் பார்த்து எடுத்தேன்.
வெல்கம் தேனம்மை
நல்ல பகிர்வு. பல தேசியத் தலைவர்களையும் மறந்து கொண்டு இருக்கிறோம் மெல்ல.....
அருமையான கிரியேட்டிவ் சாடல்...
அந்தக் கையெழுத்தைவைத்து யாரென்று விளக்கியதை ரசித்தேன்...
இது ஒரு நாடுன்னு இங்க ஒரு சட்டம்..... நீதிபதி சொல்லுறது ஒரு தீர்ப்புன்னு வாழ்க்கை ஓடிட்டு இருக்குது.... ச்சே...
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_2346.html
Post a Comment