Friday, March 11, 2011

பெயர் காரணம்

என் பெயருக்கு என்ன காரணம் தெரியாது. அப்பா அம்மா இட்ட பெயர் - நான் வடிவேல் முருகன் தான். வெடிவால் என்று என் தமிழாசிரியர் அழைத்த பெயர். காரணம் என் முதல் பதிவிலேயே சொன்னேன். தொடர் பதிவில் எழுதும் அளவு ஏதுமில்லை.

சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் இருவருக்கும் அந்தப் பெயர் வந்த காரணம் எல்லோருக்கும் தெரியும். அதுபோல வெண்ணிற ஆடை மூர்த்தி வெண்னிற ஆடை நிர்மலா பெயர் காரணமும் தெரியும்.
இவர்கள் பெயரின் காரணம் என்ன சொல்லுங்களேன்.

காத்தாடி ராமமூர்த்தி

கல்லாப்பெட்டி சிங்காரம்

கள்ளபார்ட் நடராஜன்

ஒருவிரல் கிருஷ்ணாராவ்

நிழல்கள் ரவி

ஜெயம் ரவி

ஜாவர் சீதாராமன்

காக்கா ராதாகிருஷ்ணன்

க்ரேஸி மோகன்

டெல்லி கணேஷ்

டெல்லி குமார்

4 comments:

goma said...

நான் தொடர்பதிவோ என்று வாசிக்க வந்தால்,...
சிலுக் சுமிதா பெயர்காரணம் லிஸ்டில் போடுங்க..

ஸ்ரீராம். said...

cho ராமசாமி

கோமதி அரசு said...

உங்கள் பேர் காரணம் தெரிந்து கொண்டேன்.

அவர்கள் ஏற்ற பாத்திர பேர்களால் அவர்கள் அழைக்கப் பட்டார்கள்.

டெல்லி,கணேஷ், டெல்லி குமாருக்கு மட்டும் டெல்லியிலிருந்ததால் டெல்லி ஒட்டிக் கொண்டது.

நானானி said...

ஜாவர் சீதாராமன், புளிமூட்டை ராமசாமி, பகோடா காதர்,
தை நாகேஷ், புலியூர் சரோஜா, தாம்பரம் லலிதா, தேங்காய் சீனிவாசன் இவங்கஎல்லாம்....?

இன்னும் இருக்கு.