Tuesday, October 9, 2012

அவர் இல்லை என்று சொல்லுவதில்லை..


தபால்காரரிடம் எனக்கு கடிதம் இருக்கா என்று கேட்டால் நாளை என்றுதான் சொல்வார். மகனிடமிருந்து கடிதம் எதிர்பார்க்கும் தாய்க்கு, இல்லை என்று சொன்னால் எவ்வளவு வருந்துவாரென்று தெரிந்தவர் அவர்.
தபாலை எதிர்பார்த்து பெற்றோரும், கணவன் மனைவியும், மணி ஆர்டருக்காக காத்திருக்கும் மகன்களும் இருந்தது ஒரு காலம். இன்று செல்போன், இன்டர்நெட் எல்லாம் வந்த பிறகு தபால்துறைக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ

இன்று உலக தபால் தினம்.
தபால்காரர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

இன்றும் பெங்களூரில் தபால் அலுவலகங்கள் ஜேஜே என இயங்குகின்றன:)! அவற்றுக்கான தேவை நம் நாட்டில் முழுமையாகக் குறைந்து விடாதென்றே தோன்றுகிறது.

வெயிலிலும் மழையிலும் வேலையைத் தொடரும் தபால்காரர்களுக்குதான் இன்று நம் வாழ்த்துகளைச் சொல்ல வேண்டும்! எனது வாழ்த்துகளும். நல்ல பதிவு!

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன இருந்தாலும் அந்த (அந்த நாள்) சந்தோசம் வராது...

தபால்காரர்களுக்கு வாழ்த்துக்கள்....

karges said...

தாங்கள் பரமார்த்த குரு கதையை வீ.சி.ஆர் இல் பதிவு செய்து வைத்துள்ளதாக ஒரு பின்னூட்டட்தில் கூறினீர்கள் அதை டிஜிட்டலாக மாத்தி வைத்திருந்தால்... பகிர முடியுமா..?

சகாதேவன் said...

Dear Garges,
Welcome.
I enjoyed Paramaartha Guru serial and recorded several episodes in VCR. I have lost the tapes.
Vadivelmurugan (vedivaal)