நெல்லை ம.தி.தா இந்து கல்லூரியின் கல்வி சங்கசெயலர்
திரு.மு.செல்லையாமோட்டார் பைக்கில் வரும் மாணவ மாணவிகள்
பலரிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்று அறிந்து எல்லோருக்கும் லைசென்ஸ் பெற்றுத்தர விரும்பினார்.
வட்டார போக்குவரத்து அதிகாரி திரு.கு.தங்கவேலு அவர்களை அணுகியதும், அவர் முதலில் போட்டோவுடன் கூடிய விண்ணப்பம் தருவோம். பிறகு பயிற்சி உரிமம் வழங்குவோம் என்றார். 175 பேரை இரண்டு நாளாக தன் பஸ்ஸில் R.T.O அலுவலகத்திற்கு அழைத்து வந்து விண்ணப்பம் சமர்ப்பணம் செய்தார் செயலர் திரு.மு.செல்லையா
இந்துகல்லூரியும், நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களும்,
வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளைர்கள் சங்கமும் சேர்ந்து நடத்தும் விழாவாக 14/03/2015 காலை
11.00 மணிக்கு பேட்டை இந்து கல்லூரியில், முன்னாள் கல்வி சங்க செயலாளர் திரு எ.ஏல்.எஸ் நினைவரங்கில் நடந்தது.
ஏ.எல்.எஸ்ஸின் மகன் திரு சு.சண்முகமும் வந்திருந்தார்

முதலில் திரு நயினா முகமது, உரிமையாளர், சிட்டி டிரைவிங் ஸ்கூல், விடியோ மூலம் விபத்து நிகழ்ச்சிகளை காட்டி சாலையில் கவனம் எவ்வளவு முக்கியம் என்று சொல்லி, சாலையில் காணும் எச்சரிக்கை, உத்தரவு, தகவல் சின்னங்களின் அச்சுப் பிரதிகளை வழங்கினார்.
கல்விச் சங்க பொருளாளர், திரு.தளவாய் தீ.ராமசாமி தலைமையில், திரு செல்லையா வரவேற்றார். தன் உரையில், விழாவின் நோக்கம் என்ன என்றும், ஒத்துழைத்த எல்லோருக்கும் நன்றியும் கூறினார், , தலைமை உரையில் திரு.தீ.ராமசாமி யும் வாழ்த்துரையில் திரு.ப.தி.சிதம்பரம் இந்துக் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர், முனைவர்.ப.சின்னத்தம்பி கல்லூரி முதல்வர், முனைவர் நா.ராஜலிங்கம் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைபாளர், திரு.சோ.வடிவேல்முருகன் தி-லி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம், திரு ப.பாலசுப்ரமனியன் வேணி பஸ், ஜனாப்.முகமது அப்துல் காதர், ஜப்பான் பஸ், திரு.சீ.பார்த்தசாரதி சீதாபதி டிரான்ஸ்போர்ட், திரு..ஸ்ரீதர் கே.வி.வி பஸ்,
திரு.டி.சரவணன் கே.எஸ்.ஏ பஸ்- சங்கரன்கோவில்
ஆகியோர், ஓட்டுனர் உரிமம் , சாலை விதிகள், சிக்கனம், பற்றியெல்லாம் சொன்னார்கள்.
திருமதி.ஜீ.சசி மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 அவர்கள், தான் காண நேர்ந்த மோட்டார் பைக் விபத்துகளில் பெற்றோர் பட்ட வேதனை பற்றி கூறி பிள்ளைகள் கவனமாக ஓட்ட வேண்டுமென்றார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் திரு கு.தங்கவேலு, ஓட்டுனர் உரிமமும், திரு.வடிவேல்முருகன் தன் கைப்பட வரைந்த சாலை விதிகளின் பட நகலையும் மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்திப் பேசினார்.
திரு.ஜானகிராம் அந்தோணி நன்றி உரையில் திரு.செல்லையாவின் முயற்சியை பாராட்டி, வாழ்த்திய எல்லோருக்கும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கும், தொகுத்து வழங்கிய முனைவர்.கோ.சங்கர வீரபத்திரனுக்கும் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment