Tuesday, July 24, 2007

'பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்னிடம் பேசினார்'


நான் பி யூசி ப்டிக்கும்போது எங்கள் கல்லூரியிலிருந்து ஒரு ஆல் இந்தியா டூர் சென்றோம்.தில்லியில் எங்கள் தொகுதி எம்.பி பார்லிமென்ட்க்கு அழைத்து சென்றார்.பிரதமர் நேருவுடன் ஒரு சந்திப்பு.அப்ப எல்லாம் ஆடோமட்டிக் கேமரா கிடையாது.போகஸ் செய்து,அபெர்ச்சர்,ஷ்ட்டர் ஸ்பீட் செட் செய்வதற்குள் பிரதமர் என்னிடம் "க்விக். யூ ஆர் டேக்கிங் டூ லாங்" என்றார்
இன்றும் ஒரு கேள்வி. ஒன்று முதல் பத்து வரை எண்களில் தொடங்கும் படப் பாடல்கள் வரிசையாக எழுதுங்கள். ஒன்று அல்லது ஒரு என்ற்ம் தொடங்கலாம். உ-ம். "ஒரு நாள் போதுமா". நிறைய பாட்டு உள்ளதல் எண்ணுக்கு 1 பாட்டு வரிசையாகப் போதும்.

ஒரு போனஸ் கேள்வி

"ஒரு நாள் போதுமா" பாட்டு பாண்டியனின் கொலுமண்டபத்தில் பாட்டுப் போட்டிக்கு அழைப்பதாக அமைந்த ஒரு ராகமாலிகையில் அமைந்த பாட்டு. 'எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ' என்ற வரி அமைந்த ராகம் என்ன?

9 comments:

நானானி said...

அப்படியா!? கொடுத்து வைத்தவர்தான்
நீங்கள்.

ஒன்று எங்கள் ஜாதியே..
இரண்டு மனம் வேண்டும்..
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும்
ஐந்தெழுத்தான் பெற்ற ஆறெழுத்தண்ணலை
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன்..
ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை..
எட்டு எட்டாய் வாழ்கையிருக்கு..
நவராத்திரி சுபராத்திரி...
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு

சரியா..தப்பா..?

நானானி said...

இந்தக்கேள்வி தங்களுக்கே வேடிக்கையாய் இல்லை?
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்
என்பதுபோல்.
தர்பாரில் வைத்துப் பாடுகிறார் ஆகவே
அது 'தர்பார்' ராகம்.

நானானி said...

இந்தக்கேள்வி தங்களுக்கே வேடிக்கையாய் இல்லை?
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்
என்பது போல்.
அதன் சரணத்தில் வரும் ஒவ்வொரு
வரியிலும் அந்தந்த ராகங்களின் பெயரோடு வரும்.
எனவே அது 'தர்பார்' ராகம்.

சகாதேவன் said...

இன்று உங்களுக்கு 9 மார்க். 8க்கு நீங்கள் சொன்ன பாட்டில்
ரா ரா ராமையா தான் பல்லவி.வேறு யோசியுங்கள்.
மற்ற சரணங்களில் தோடி,கானடா, மோகனம் என்று அடிக்கடி சொல்லும் ராகங்கள்.அதனால்தான் இதை கேட்டேன்.

நானானி said...

மில்லினம் பார்க் ஜெல்லி மீன் முன்
உங்களை நீங்களே எடுத்ததா?
சகா?

சகாதேவன் said...

ஆமாம் நானானி, மில்லெனியம் பார்க்கில் எனக்கு மிகப் பிடித்த இடம் இந்த க்ளொவ்ட் கேட்தான். போட்டோ எப்படி?

நானானி said...

நானும் எடுத்திருக்கிறேனே! ஆனால் உங்களை மாதிரி தைரியமாகப்
போடமுடியாது.இதே போல் நேவிப்யரில் உள்ள மாஜிக் கண்ணாடி முன் நின்றும் எடுத்துக்கொள்ளுங்கள்.
தமாஷாக இருக்கும்.

Anonymous said...

கடைசியில் suspense-ஆக விட்டு விட்டீர்களே, நேருவைப் படம் எடுத்து முடித்தீர்களா? அந்தப் படம் இன்னும் இருக்கிறதா?

சகாதேவன் said...

ராமலக்ஷ்மி,
வருஷம் என்னாச்சு? சில ஆல்பங்கள் தவறவிட்டேன்.இருக்கும் பழைய படங்களை ஸிடியில் பதிந்து கொண்டிருக்கிறேன்.
சகாதேவன்.