Wednesday, August 1, 2007

"யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்"

எங்கள் கல்லூரி ப்ரின்ஸிபல் ரெவ்.பாதர் சூசை மிகவும் கண்டிப்பானவர். எல்லோருக்கும் அவரைப்பார்த்தது முதல், மரியாதை கலந்த பயம் உண்டு. காலை க்ளாஸ்க்கு லேட் ஆனால் அவரிடம் சீட்டு வாங்கினால்தான் ப்ரொபசர் அனுமதிப்பார். ஒரு நாள் சீட்டு வாங்க வேண்டி வந்தது. பைன் கட்டச் சொன்னால் மாலை டவுண்பஸ்க்கு பணம் இருக்காதே என்று பயந்தே சென்றேன். முதல் முறையானதால் எனக்கு சீட்டு தந்து விட்டார்.

ரிபீட் ஆனால் "யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்" என்று சொல்லி பைன் போடுவார்.

பரீட்சை நடக்கும் போது எனக்கு மதிய உணவு வீட்டிலிருந்து வரவில்லை. 2.00 ம்ணி வரை பார்த்த நான் பரீட்சைக்கு நேரமாச்சு என்று எழுதச் சென்றுவிட்டேன். லேட்டாக கேரியருடன் வந்த அவன் ஆபீஸ் ரூமில் கேட்டிருக்கிறான். ப்ரின்ஸியிடம் யார் சொல்வது என்று அவர்கள் யோசிக்க அப்போது தன் அறைக்கு வந்த ப்ரின்ஸி புதிய முகம் பார்த்து யார் நீ என்றார்.விபரம் அறிந்து அவரே ஹாலுக்கு வந்து என்னிடம் நீ சாப்பிட்டாயா? என்று கேட்டார். உனக்கு 10 நிமிடம் தருகிறேன், கீழே போய் சாப்பிட்டு வ்ந்து எழுது என்றார். கண்டிப்பான பாதரிடம் அன்று நான் கண்ட தாயுள்ளம், மறக்க முடியுமா?

இன்று ஒரு கேள்வி கேட்கலாமா?
இந்த போஸ்டில் எத்தனை சினிமா பெயர்கள் உள்ளன?
ஒரு 11 ஆவது இருக்கும்.

11 comments:

Anonymous said...

பரீட்சைக்கு நேரமாச்சு
புதிய முகம்
யார் நீ
முதல் மரியாதை

இது நான்கும் சரி என்று கண்டிப்பாகத் தெரியும். இனி குருட்டாம்போக்கு பதில்கள்:

தாயுள்ளம்
ஒரு நாள்
முதல் முறை
டவுன் பஸ் ?? (ஹி ஹி....)

- RL

சகாதேவன் said...

நீங்கள் சொன்ன 4-ம் சரி. குருட்டாம்போக்கில் ஒருநாள் & முதல் முறை தப்பு.இன்னும் 9 படம் யோசி.
சகாதேவன்.

நானானி said...

சகாதேவன்!!!
இருவரும் அவரவர் ப்ரின்ஸிக்களைப் பற்றி எழுதியிருக்கிறோம்.
ஆஹா!..என்னப்பொருத்தம்..
இந்தப்பொருத்தம்...?!

நானானி said...

சகாதேவன்!நான் முதலில் போட்ட
பின்னோட்டம் வரவில்லையா?
இந்தா பிடிங்க..
முதல் மரியாதை
PROFESSER-ஹிந்தியும் உண்டுதானே?
டவுன் பஸ்
பணம்
பரீட்சைக்கு நேரமாச்சு
அவர்கள்
புதியமுகம்
யார் நீ
தாயுள்ளம்
மறக்கமுடியுமா
அவன் - டப்பிங் படம்
11-தானா இன்னும் இருக்கா?

சகாதேவன் said...

நானானி, நீங்கள் விட்டது: 1.நான் 2.யார் 3.நீ. சரியா?
சகாதேவன்.

Anonymous said...

இதோ எனது அடித்த செட் ஆஃப் குருட்டாம்போக்குs:

பணம்
நான்
நீ
அவன்
மாலை
இன்று ஒரு கேள்வி ???!!?!??

அவர்கள் - last time miss ஆச்சு. இது sujatha, rajini, kamal padam, so sure-ஆ தெரியும்.

நானானி முந்திக் கொண்டார்கள். ஆனாலும் எத்தனை தவறு இருக்கிறதோ அத்தனை பொற்காசுகளைக் குறைத்துக் கொண்டு மீதிப் பரிசுப் பணத்தைத் தருவீர்கள்தானே ? ஹி ஹி ...

RL

Anonymous said...

orey kallil irandu maangaa.quizzum aachchu,father patriyum solliyaacchu... killadi vedivaalyaa nee.
anbudan nunivaal

தென்றல் said...

"யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்" - nice caption ;)


/எத்தனை சினிமா பெயர்கள் உள்ளன?
/

விட்டுப்போனது...

1. கல்லூரி
2. இன்று

பதிவு போட்டதுக்கு பின் வெளிவந்த படம்னாலும் சரிதான சார்.. ;)?

சகாதேவன் said...

தென்றலே,
புது சினிமா இரண்டும் சரி.
அடிக்கடி வீசுங்கள்

cheena (சீனா) said...

ஒரு நல்ல பதிவு - பிரின்ஸியின் பரிவு நன்று

இது ஒரு புதிரும் கூட

நல்வாழ்த்துகள்

சகாதேவன் said...

வாருங்கள் சீனா, தங்களை அறிமுகம் செய்த நானானிக்கு நன்றி