Wednesday, February 27, 2008

தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு

இன்று காலை எழுந்ததும் வலையில்
பார்த்த செய்தி சுஜாதா அவர்களின் மறைவுதான்.
அவருடன் பேசியவர்கள், அவர் எழுதியதைப் படித்தவர்கள்,
எனப் பலரின் அனுபவங்களைப் படிக்க முடிந்தது.
மிகச் சிறந்த எழுத்தாளர். திரையிலும் சில நல்ல விஷயங்கள் சொன்னார்.
சிவாஜி படத்தில் இரு பெண்களுக்கு அங்கவை, சங்கவை என்று
பெயர் சூட்டியதற்காக அவரையும் சாலமன் பாப்பையாவையும்
வலையில் எப்படியெல்லாமோ திட்டித் தீர்த்தார்கள்,
நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள்.
இன்று அவர்களே சுஜாதாவைப் புகழ்ந்து எழுதுவார்கள்.
அந்த இரு பெயர்களும் பலருக்குப் புதுசு.
சின்ன வயதிலேயே ஒளவையார் படம் பார்த்ததால்
என் போன்றவர்களுக்குத் தெரியும்.
அவர் மறைவு
தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு.
சகாதேவன்

4 comments:

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்.

இகழ்வதற்கு எப்பவுமே தயாராக இருப்பவர்கள் தான் நிறைய.
இனி எதுவுமே அவரை அண்டாது.

சகாதேவன் said...

ஆமாம் வல்லிசிம்கன். அங்கவை சங்கவை பெயர்களை உலகறியச்செய்தார்.
அன்று திட்டியவர்கள் தங்கள் முகத்தை எங்கவைப்பார்கள்.
சகாதேவன்

சகாதேவன் said...

ஆமாம் வல்லிசிம்கன்.
அங்கவை சங்கவை பெயர்களை உலகறியச்செய்தார்.
அன்று திட்டியவர்கள்
தங்கள் முகத்தை
எங்கவை ப்பார்கள்.
சகாதேவன்

நானானி said...

பாரி வள்ளலின் புதல்விகளின் பெயர்களை சிவாஜி பார்க்காதவர்களைக்கேட்டால் முழிப்பார்கள்.
நம்மை மாதிரி ஔவையார் படம் மறக்காதவர்களுக்கு மறக்கமுடியாத பெயர்.