Sunday, May 4, 2008

அர்ஜுன் ஒரு நாள் முதல்வர் ஆனது போல........

(தலைப்புக்காகத்தான்) நான் ஒரு நாளாவது பிரதமராக இல்லாமல் ஒரு இந்தியக் குடிமகனாக(பிரஜைதான்)என் தினசரி வேலைப்பளுவிலிருந்து ஓய்வு பெற நினைக்கிறேன் என்று பிரதமர் நேரு, ஏப்ரல் 29, 1958 அன்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கூறிவிட்டு தன் சக அங்கத்தினர்களிடம் ஐடியாவும் அனுமதியும் கேட்டார்.
நேரு மேலும் சொன்னார். "சில வாரங்களுக்கு முன் நான் மாற்றம் இல்லாத வேலை செய்வதாலும், களைப்பாலும் ஒரு மாற்றம் வேண்டி அவ்வாறு சொன்னேன். எல்லோரும் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று நினைத்து விட்டார்கள். பத்திரிகைகளும் தங்கள் ஊகங்களை எழுதின. உழைக்க வேண்டும், புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இன்னும் உண்டு. மக்களுடன் எனக்குரிய இணைப்பு உறுதியாக உள்ளதுடன் அவர்களுக்காக மேலும் உழைத்து, அவர்கள் குறை தீர்க்க வேண்டும் என்ற என் ஆசை தீரவில்லை. உடல் அளவில் நான் நன்றாகவே இருக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் திறமையாக பணி புரிவேன் என்று நம்புகிறேன்".
மே 1, 1958 அன்று நடந்த காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நேரு இவ்வாறு நினைக்க காரணம் என்ன என்று விவாதித்தார்கள்.
நேரு, தான் உடல் நிலை சரியில்லாததால் ஓய்வு விரும்பவில்லை என்றும், பல விஷயங்கள் காங்கிரஸ் கட்சியிலும் நாட்டிலும் வித்தியாசமாக நடப்பதுதான் என்றார். பொது வாழ்க்கை சரியான வழியில் செல்லவில்லை என்றும் அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது என்றார். காங்கிரஸ் கட்சியில் மட்டும் நான் சொல்லவில்லை நாடு முழுவதும்தான் என்று கூறி அதனால்தான் என் வழக்கமான தினசரி வேலையிலிருந்து ஓய்வு பெற்று அமைதியாக யோசித்துப் பார்க்கவே விரும்புகிறேன் என்றார்.
ஹிந்து நாளிதளில் This Day That Age பகுதி படிப்பீர்களா? மே 1, மே 3 இதழ்களில் நான் படித்ததுதான் இது.

3 comments:

நானானி said...

நாடு 'டேக் டைவர்ஷன்' என்று தவறான பாதையில் செல்ல ஆரம்பித்ததை அன்றே உணர்ந்த தீர்க்கதரிசி நம் அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய ஜவஹர்லால் நேரு அவர்கள்!!
மனம் நொந்த அவரது வார்த்தைகள் இன்றளவும் எந்த அரசியல்வாதியின் மனசையும் லேசாகக் கூட அசைக்கவில்லை.

ராமலக்ஷ்மி said...

"பொது வாழ்க்கை சரியான வழியில் செல்லவில்லை என்றும் அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது என்றார்."

"பல்லாங்குழியா.. அப்படின்னா?" என உங்க அக்கா வீட்டுத் திருமணத்தில் மணமக்கள் கேட்ட மாதிரி "அடிப்படை சேவையா..அப்படின்னா..? என அப்பாவியாய் கேட்பார்கள் இன்றைக்கும் இந்த அரசியல்வாதிகள்!
இந்தியா வாங்கி வந்த சாபமுங்க இது!

Vijay said...

HI Sahadevan,
en blog pakkaththiRku vanthathaRku mikka nanRi. (vettivambu). Athu 1988 or 1989 enRu ninaikkiREn.
Keep visiting my blog site.

Regards.
Vijay