அடுத்த கமல் படத்தின் விளம்பரத்தில் நடிகர் லிஸ்ட் இப்படி இருக்குமோ?
இது கமலோ, இதுவும் கமலோ என்று வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் (பாத்திரம்தான், கதையில்லை)கமல்ஹாசனோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு வேடங்கள் அணிந்து நடித்துள்ள படம் தசாவதாரம்.
வசனமும் அவர்தானாம். நெப்போலிய குலோத்துங்கன், "யாம் அறிவோம், யாம் அறிவோம்" என்று சொன்னதும், ரங்கராஜன், "உன்னை அறியாமல் ஹரிஓம், ஹரிஓம் என்று எத்தனை முறை சொல்லிவிட்டய்", என்று கேட்டதில் கற்பனையும்,
கோவிந்தன், போலீஸ் ராவ் இடமும் நரசிம்மராவ் இடமும், ராவோட ராவாக இருந்து செய்து விடுங்கள் என்று சொல்வதில் ந்கைச்சுவையும் நன்றாக இருக்கிறது.
6.30க்கு தொடங்கிய படம் இன்னும் இன்டர்வல் வரவில்லையே என நினைக்க, 8 மணிக்கு இன்டர்மிஷன் வந்தது. சரிதான் இன்னும் 1 1/2 மணி நேரம் ஓடுமே என்று நினைத்து ஒரு ப்ரூ காபி சாப்பிட்டுவிட்டு அவளுக்கு ஒரு கோன் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு வந்தேன்
டைரக்டர்கள் பி.வாசு, சந்தானபாரதி எல்லோரும் வந்துவிட்டார்கள், ரவிக்குமார் வந்ததும் படம் முடிந்துவிடுமே என்று எதிர்பார்க்க வைத்துவிட்டார், படத்தின் டைரக்டர்.
4 comments:
*********"பாராட்டா குட்டா?"********
முதலில் சொன்னவை பாராட்டு.
//ரவிக்குமார் வந்ததும் படம் முடிந்துவிடுமே என்று எதிர்பார்க்க வைத்துவிட்டார், படத்தின் டைரக்டர்.//
அடடா முடிந்துவிடுமே எனப் பாராட்டா?
அப்பாட அவர் வந்து விட்டால் ஒருபடியாய் முடிந்து விடும் எனக் குட்டா?
சொல்வீர்களா சகாதேவன்:)?
எல்லா படங்களிலும் போல ரவிக்குமார் தான் டைரக்ட் செய்த இந்தப் படத்திலும் கடைசியில் வருவாரே. அப்ப தானே படம்முடியும் என்ற எதிர்பார்ப்பு தான்.
//ரவிக்குமார் வந்ததும் படம் முடிந்துவிடுமே என்று எதிர்பார்க்க வைத்துவிட்டார், படத்தின் டைரக்டர்.//
எனக்கும் அதே எண்ணம்தான்..
//சகாதேவன் said...
வெல்கம் விஜய்,
பட்ங்கள் அருமை. எனக்குப் பிடித்தது:
1.எங்கும்.....அரசியல்
2.வளைந்து..-நல்ல காம்போசிஷன்
3.தேங்காய்
4.சர்தார்ஜி- ஆக் ஷன்
5.எது நிஜம்.....-பி.ஐ.டி. பிரதிபலிப்பு போட்டிக்கு
என்ட்ரி ஆனதோ. பார்த்த ஞாபகம்.
மற்றதையும் பார்த்து சொல்கிறேன்.
சகாதேவன்//
வருகைகும்..வாழ்த்துக்கும் நன்றி...
Post a Comment