வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதைக் கண்டுகொள்ளுங்கள். எக்ஸ்ட்ரா சர்க்கரை எடுத்துக்கொள்வதை தவிர்த்து விடுங்கள் என்று உலக டயபட்டீஸ் தினத்தன்று ஹார்லிக்ஸ் லைட் விளம்பரத்தில் பார்த்தேன். நவம்பர் 2006 (தேதி நினைவில்லை) செய்தித் தாளிலிருந்து வெட்டி பத்திரமாக வைத்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருக்கலாம், மறந்தும் இருக்கலாம்.
தித்திப்பான இந்த பத்து விஷயங்களை செய்து பாருங்களேன்.
1. ஒரு நாள் மாலை வேளையில் சந்தித்துப் பேச உங்கள் நண்பர்களை அழையுங்கள்.
2. உங்கள் அன்பு மனைவி/கணவருக்கு ஒரு காதல் கடிதம் எழுதி போஸ்ட் செய்யுங்கள்.
3. "முத்து" திரைப்படத்தில் ரஜினியின் அமர்க்களமான நடிப்பை ரஸித்திடுங்கள்.
4. "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்"-என்றும் பசுமையான இது போன்ற பாடலை பாத்ரூமில் பாடுங்கள்
5.தெருமுனை கிரிக்கெட் மேட்ச்சில் அம்பயரிங் செய்யுங்கள்.
6. பழைய கல்லூரி போட்டோவைப் பார்த்து நினைவில் மூழ்குங்கள்.
7. பறவைகளுக்கு இரை போடுங்கள்.
8. தெருவோர ஏழைப் பிள்ளைகளுக்கு க்ரேயான் கலர்கள் கொடுங்கள்.
9. உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை பாராட்டி மகிழ்வியுங்கள்.
10. கொஞ்சமும் எதிர்பார்க்காத உங்கள் பழைய கால நண்பருக்கு போன் சேய்து பேசுங்கள்.
நான் என் நண்பர்/உறவினர் வீட்டிற்கு (டிவி சீரியல் தொடங்குமுன்) சென்று பேசி வருவேன்.
பழைய கல்லூரி குரூப் போட்டோக்களை எடுத்து நண்பர்களை நினைத்து மகிழ்வேன்.
எங்கள் வீட்டருகில் பூட்டியுள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மயில்கள் உள்ளன. அவை இரை தேடி எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வரும். தினமும் பேத்திகளுடன், மயில்களுக்கு பொட்டுக் கடலை தூவினால் கொத்தி சாப்பிட்டுச் செல்லும்.
குழந்தைகளுக்கு ஒரு படம் தந்து வர்ணம் தீட்டும் போட்டி நடத்தினேன். எல்லாருக்கும் ஒரு சிறிய க்ரேயான் பாக்ஸ் தந்தேன். பரிசு முதல் மூன்று பேருக்குத்தானே. க்ரேயான் பாக்ஸ் எல்லோருக்கும் பரிசு என்றதும் அவர்கள் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?
நீங்களும் செய்து பாருங்களேன். சம்பாத்தியம் , குடும்பம், டிவி, சினிமா எல்லாம் தாண்டி வாழ்க்கை எவ்வளவு தித்திப்பானது என்று பாருங்கள்.
8 comments:
10 thiththikkuthu
waalthukkal
thiththikkudha?
varavukku nandri.
அடடா! இந்தப் பதிவு வந்த அன்றே நான் இட்டிருந்த பின்னூட்டம் தங்களுக்கு வந்து சேரவில்லை போலிருக்கிறதே!
பேத்திகளுடன் மயில்களுக்கு பொட்டுக்கடலை தீனி!
போட்டி வைத்து மழலைகளுக்கு
பரிசு வழங்கிய பாணி!
ரசனையுடன் வாழ்ந்து-
அத்தகைய
தருணங்கள் தரும்
தித்திப்பில் மகிழ்ந்து-
எங்களுக்கும்
வழிகாட்டியிருக்கிறீர்கள்.
பழைய புகைப்படங்களைப் பார்த்து
நினைவலைகளில் மூழ்குவதும், நண்பர்கள், உறவினர்களை நலம் விசாரித்து ஃபோன் செய்வதும் நான் அடிக்கடி செய்பவை. மற்றதும் முயற்சிக்கிறேன்.
//நான் என் நண்பர்/உறவினர் வீட்டிற்கு (டிவி சீரியல் தொடங்குமுன்) சென்று பேசி வருவேன்.//
இது பற்றி எனது பதிவின் பின்னூட்டத்தில் பேசி விட்டோம்.
ரொம்ப நல்லாருக்கு, சகா!
நீங்கள் சொன்னதில் சிலவற்றை நான் செய்து வருகிறேன்.
பழைய புகைப்படங்களில் மூழ்குவது!அதில்தான் எத்தனை நினவுகள் மலரும்!!குழந்தைகளோடு நேரம் செலவளிப்பது. மனசு லேசாகும் நேரமது.
நண்பர்கள் வீட்டுக்கு விசிட் அடிப்பது.
மற்றவற்றையும் முயற்சிக்கிறேன்.
என்னால் முடியாதது...ஆசைப்படுவது
மயில்களுக்கு தீனி போடுவது. கொடுத்துவைத்தவர் நீங்கள்!!!
உங்க வீட்டுக்கு வந்து நானும் மயில்களுக்குத் தீனி போடவா?
காக்கா, குருவி, புறா, எல்லாம் சாதாரணமாக வரும்.
அதனால்தான் மயிலுக்கு இரை போட உங்களுக்கு ஆசை. வாருங்கள்.
ஆமாம் இந்தக் குருவியை இப்பல்லாம் காணுமே.
காக்கா, குருவி, புறா, எல்லாம் சாதாரணமாக வரும்.
அதனால்தான் மயிலுக்கு இரை போட உங்களுக்கு ஆசை. வாருங்கள்.
ஆமாம் இந்தக் குருவியை இப்பல்லாம் காணுமே.
Post a Comment