Tuesday, August 5, 2008

பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்ணா

இன்று கே டிவி பார்த்தீர்களா. பழைய படங்களை மிஸ் பண்ணாதீங்க. நல்ல பாடல்கள் கேட்கலாம். ஏவிஎம்மின் பெண் படம். அதில் எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கும். சுதர்சனம் இசை.

இந்த பாட்டை கேளுங்களேன் ஸாரி படியுங்கள்.

பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்னா
இனி போதும் மலர் கண்ணனே

புல்லாங்குழலில் உள்ளம் எல்லாம் மயக்கியே
புல்லாங்குழலில் உள்ளம் எல்லாம் மயக்கி
கண்ணைப் பொத்தி மெல்ல அழ வைக்காதடா
உனது பொல்லாத் தனத்தை......

பத்து ஜனங்கள் நடுவிலே உன்னை பாலனென்று தூக்கி எடுத்தால்
கட்டி முத்தமிட்டு வம்புகள் செய்வாய்
வெட்கக் கேட்டினை எவரிடம் சொல்வேன்

உன்னை காணாதிருந்தால் கணம் ஓர் யுகமாகுதே
காணாதிருந்தால் கணம் ஓர் யுகமாகுதே


கட்டிப் போடுவேன், எந்தன் அருகில் விரைந்து வருவையே
உன்னை கட்டி போடுவேன் எந்தன் அருகில் விரைந்து வருவையே

உனது பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்ணா
இனிபோதும் மலர் கண்ணனே.

சிட்டை ஸ்வரங்களுடன் டி.எஸ்.பகவதி அழகாக பாடியிருப்பார்.
அஞ்சலி தேவி பாட ஜெமினி கணேசன் வீணை வாசிப்பது போல காட்சி.

பாடல்களை ரீமிக்ஸ் என்று கெடுப்பதை விட அப்படியே இன்றைய பாடகி/பாடகர்களை பாட வைத்து காட்சிகள் எடுத்தால் எத்தனை நல்ல பாட்டுக்கள் கேட்கலாம்.

13 comments:

ers said...

எப்படி எடுத்தாலும் இப்போது பழசை கொலை செய்து விடுவார்கள். இதை இப்படியே கேட்பது தான் உண்மையான சங்கீதத்தை ரசித்ததற்கு அர்த்தம். ஏன் உங்களுக்கு இந்த விபரீத ஆசை?

நானானி said...

தமிழ் சினிமா சரியாகத்தான் செல்லியிருக்கிறார், சகாதேவன்!
பழைய பாடல்களை ரீமிக்ஸ் என்ற பேரில் கர்ண கடூரமாகுவதைக் காட்டிலும் அப்படியே கேட்பதுதான் சுகம்..சுகம்.
என் வீணையில் நானே சுவரங்களைத் தேடித் தேடி கண்டுபிடித்து
வாசித்து அது என் பேரில் அமைந்த ராகம் என்பதையும் அறிந்தபோது அடைந்த சந்தோஷம்....நான் மட்டுமே உணரக் கூடியது.
நல்ல தேர்வு சகாதேவன்!

சகாதேவன் said...

உங்கள் பெயரை எல்லாரும் கண்டுபிடித்துவிடுவார்களே

goma said...

வேண்டாம் சகாதேவன் .இன்றுள்ள திரை உலகம் காசுக்கு படம் எடுக்கிறது.இவை போன்ற பாடல்கள், அப்படி அப்படியே மிளிரட்டும்.வைரங்கள் தங்கத்தோடு இருக்கட்டும் ,தகரத்தில் பதிக்க வேண்டாம்

Kanchana Radhakrishnan said...

அந்த படத்தில்தான் சந்திரபாபு.எஸ்.பாலசந்தருக்கு 'கல்யாணம்...கல்யாணம்"என்ற பாடலுக்கு பிண்ணனி பாடி இருப்பார்.

சகாதேவன் said...

வெல்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
"சரோஜா கிரிஜா
ஜலஜா வனஜா
மாலினி ரோஷிணி
மஞ்சுளா பாஷிணி
யாரோ ஒரு பெண்மணி
அவளே உன் கண்மணி"
எல்லாமே நினைவில் நிற்கும் பாட்டுக்கள்

கோமா,
சரிதான்.புதியவர்கள் எல்லாம்
கேட்க முடியுமே என்று நினைத்தேன்

நானானி said...

புதிய தலை முறையில் ஒரு சாரார் பழைய பாடல்களை விரும்பிக்கேட்டு,
கேசட்டை திரும்பத் திரும்பப் போட்டு
பாடிப் ப்ழகுகிறார்கள்.
விண்டேஜ் என்ற அமைப்பினர் மைலாப்பூரில் ஒரு முறை நடத்திய நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். இளைஞர்களும் இளைஞிகளும் எவ்வளவு அர்புதமாக பழைய பாடல்களைப் பாடினார்கள் தெரியுமா?
அதிலும் அவர்கள் கொடுத்த கமெண்ட்தான் சூப்பர். "பழைய பாடல்கள் இவ்வளவு அருமையாக இருக்குமென்பதே தெரியாமல் போயிற்றே!!!!" கேட்டவுடன் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. சாகா வரம் பெற்ற பாடல்கள் எவ்வகையிலாவது அடுத்த தலைமுறையினரிடம் சென்று சேர்ந்துவிடும் என்று.
கொஞ்சம் நீஈஈஈண்ட பின்னூட்டமாகி விட்டது

மோனோலிசா said...

இன்றுள்ளவர்கள் கேட்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் புரிகிறது.ஆனால் நீங்கள் அதை செய்து பாருங்கள்..'..நல்லதோர் வீணை செய்தே...',என்ற பாடலுக்கு இது ,உதாரணமாகி விடும்..அதே சமயம் உங்கள் போல் ரசிகர்கள் மனமும் புண்ணாகி விடும்.தேவையா?
இப்படித்தான் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும், கண்ணும் கண்ணும் கலந்து ,என்ற பாடல் அபூர்வமாக ரேடியோவிலும் ,தூர்தர்ஷன் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியிலும் கேட்டு மகிழ்ந்த போது ,கிட்டிய ,அதே பூரிப்பு, இன்று பல சேனல்களில்,பல ஒளிபரப்பில் ,அடிக்கடி கேட்கும் பொழுது இல்லை.மலிவாகக் கிடைத்தால் எதுவும் மதிப்பு இழந்து போகும்

Anonymous said...

பாலச்சந்தருக்கு சந்திரபாபு குரல் கொடுத்திருக்கிறார் என்றுதானே காஞ்சனாராதாகிருஷ்ணன் சொன்னார் ...உடனே வரிசையாக "சரோஜா கிரிஜா
ஜலஜா வனஜா
மாலினி ரோஷிணி
மஞ்சுளா பாஷிணி
யாரோ ஒரு பெண்மணி
அவளே உன் கண்மணி"
பெயர்கள் துள்ளி வருகிறதே.கல்லூரி நினைவு அலை மோதுகிறதா?

சகாதேவன் said...

அனானி,
அந்தப் படம் வந்தபோது நான் பள்ளியில்தான் இருந்தேன்

ராமலக்ஷ்மி said...

அழகான வரிகள். கேட்டதில்லை இப்பாடலை. காட்சி அமைப்பும் நன்றாகத்தான் இருந்திருக்கும்//அஞ்சலி தேவி பாட ஜெமினி கணேசன் வீணை வாசிப்பது போல// இருக்கையில்.

//பாடல்களை ரீமிக்ஸ் என்று கெடுப்பதை விட அப்படியே இன்றைய பாடகி/பாடகர்களை பாட வைத்து காட்சிகள் எடுத்தால் எத்தனை நல்ல பாட்டுக்கள் கேட்கலாம்.//

இதை நானும் வழி மொழிகிறேன். யாவரும் அவரவர் கருத்தைக் கூறி விட்டார்கள். தாங்கள் ரீமிக்ஸை ஊக்குவித்து சொல்லவில்லை. "கெடுப்பதை விட" என தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டீர்களே!

நானானி சொல்கிற மாதிரி //சாகா வரம் பெற்ற பாடல்கள் எவ்வகையிலாவது அடுத்த தலைமுறையினரிடம் சென்று சேர்ந்துவிடும்//தான். ஆனால் நீங்கள் சொல்வது போல நடந்தால் இன்னும் பல நல்ல பழைய பாடல்கள் சாகாவரம் பெறும் அல்லது மறுபடி அவதரிக்கும் என்று கூட சொல்லலாம்.

சகாதேவன் said...

தாங்க்ஸ் ராமலக்ஷ்மி. விபரீத எண்ணம் என்று என்னை அடிக்க வந்து விட்டார்கள்.நீங்கள்தான் என் ஆசையை புரிந்து கொண்டீர்கள்.

ராமலக்ஷ்மி said...

ஆகா, உங்கள் பிறந்த தினத்தன்று காலையிலே இப்படி ஒரு சந்தோஷத்தைக் கொடுத்து விட்டேனா:))! பிறந்த தின வாழ்த்துக்களைக் கூறி தங்கள் ஆசிகளை வாங்கிக் கொள்கிறேன்.