Friday, December 31, 2010

சாலை பாதுகாப்பு வாரம்

ஜனவரி முதல் வாரம் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கிறோம். சாலைக்கே பாதுகாப்பு இல்லை. போன மாதம்தான் செப்பனிடப்பட்ட சாலையை இன்று இ.பி காரர்கள் வந்து தோண்டி சாலை குறுக்கே பள்ளம் உண்டாக்குவார்கள். நாளை டெலிபோன்காரர்கள் அவர்கள் பங்குக்கு வேறிடத்தில் தோண்டுவார்கள். கட்சிக்காரர்கள் வந்து உங்கள் வேலையை சீக்கிரம் முடியுங்கள். மந்திரி வருகிறார். நாளை நாங்கள் ஆர்ச் நிறுத்த தோண்டணும் என்பார்கள். மீண்டும் செப்பனிட எத்தனை நாளாகுமோ?

நமக்கு நாமே என்பது போல நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொழும்பிலிருந்து வந்த என் சகலை, அங்குள்ள சாலை விதி புத்தகம் தந்தார். அதன் பெயர், "வீதி ஒழுங்கு". அந்த ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.

* இடது புறமாகவே செல்லுங்கள்.


* வலது புறமாகவே முந்துங்கள்.


* மிதமான வேகத்தில் செல்லுங்கள். இன்று நால்வழி சாலை.
எல்லா ஊர்களிலும் பை பாஸ். அதிவேகம் செல்லும் புதுப்புது கார்கள்.

என் நண்பர் ஒருவர் தூத்துக்குடி - சென்னை 7 மணி நேரத்தில் போய் விட்டேன் என்றார். என்ன அவசரம்? ஹைவேயில் வேகக் கட்டுப்பாடு கட்டாயம் தேவை. மணிக்கு 100 கி.மீ வேகம் போதுமே.
* இரவில் அதிக கவனம் - ஹைவேயில் எதிரே வண்டி வருகையில் ஹெட்லைட் லோ பீம் போடுங்கள். நான் டி.வி.எஸ்ஸில் இருந்தபோது கம்பெனி டிரைவர் கந்தசாமி சொன்னார். எங்கள் பாஸ் திரு.டி.எஸ்.கிருஷ்ணா அவர்கள் எதிரே மாட்டு வண்டி வந்தால், டிரைவர் பின்னந்தலையில் அடித்து 'மாடு கண் அவிஞ்சு போகும். டிம் போடுடா' என்பாராம் (அப்ப எல்லாம் ஹெட்லைட் பல்ப் 60 வாட்ஸ்தான். இன்று ஹேலொஜென் பல்ப் 100- 125 வாட்ஸ்)

இன்னும் சொல்லலாம். வீதி ஒழுங்கு எல்லோரும் அறிந்ததுதான். அதனால் ஒழுங்காக செல்லுங்கள்.

சுருக்கமாக: START SOONER, DRIVE SLOWER, LIVE LONGER.

Sunday, December 12, 2010

அம்மா என்ன சொல்வாள்

பிரபலங்களின் அம்மா அவர்களிடம் என்ன சொல்லியிருப்பார்கள் என்று ஒரு கற்பனை.

மைக்கேல் ஆஞ்செலோ:
"நீ ஏன் எல்லா குழந்தைகளையும் போல சுவரில் வரையக் கூடாது? உத்திரத்தில் அதை அழிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

மேரி :
"உன் ஆட்டுக்குட்டி உன்னோடு ஸ்கூலுக்கு வந்தது சரி. ஆனால் அது எப்படி உன்னை விட அதிக மார்க் வாங்கிச்சு?

தாமஸ் எடிசன் :
"நீ மின்சார லைட் பல்ப் கண்டுபிடித்தது ரொம்ப சந்தோஷம். மணி பத்தாச்சு. லைட் ஆஃப் பண்ணிவிட்டு வந்து படு".

இந்த மூன்றும் ரோட்டரி நியூஸிலிருந்து சுட்டது. வரும் நாலும் நம்மது.

ராமானுஜம்
"பெரிய கணக்குப் புலின்னு பேரு. ஒருநாள் வீட்டுச் செலவு கணக்கு எழுதத் தெரியலே."

ரஜினிகாந்த்:
"கண்டக்டராகவே இருந்தால் இத்தனை வருஷத்தில் மிச்சக்காசு தராமலேயே எவ்வளவு சம்பாதித்திருக்கலாம். தினம் ஒரு வேஷம் போட்டு, நடிச்சு........ச்சே."

காந்தி :
"வக்கீல் வேலை பார்த்து தென் ஆப்பிரிக்காவிலே ரிட்டையர் ஆகியிருக்கக் கூடாதா? இப்போ என்.ஆர்.ஐ என்றால் என்ன பேர் பார்த்தியா?"

கருணாநிதி
:
:வாசிச்சுக்கொண்டிருந்தால் எத்தனை வாரிசுகள் வந்திருப்பாங்க? இசை வம்சமும் தளைத்திருக்கும்".

நீங்களும் யோசிச்சு எழுதுங்களேன்.

Tuesday, December 7, 2010

அப்பப்பா இத்தனை UPபா

இந்த இரண்டெழுத்து வார்த்தைக்கு இத்தனை அர்த்தங்களா?

There is a two-letter word that perhaps has more meanings than any other two-letter word and that is ‘UP.’
It’s easy to understand UP, meaning toward the sky or at the top of the list, but when we awaken in the morning, why do we wake UP? At a meeting why does a topic come UP? Why do we speak UP and why are the officers UP for election and why is it UP to the secretary to write UP a report?
We call UP friends. And we use it to brighten UP a room, polish UP the silver; we warm UP the leftovers and clean UP the kitchen. We lock UP the house and fix UP the old car.
We go UPstairs; people live in Upscale localities; We dislike an Upstart; A new business venture requires a startUP; we ask for payment UPfront.
At other times the little word has real special meaning. People stir UP trouble, line UP for tickets, work UP an appetite and think UP excuses. To be dressed is one thing, but to be dressed UP is special.
And this UP is confusing; A drain must be opened UP because it is stopped UP. We open UP a store in the morning but we close it UP at night.
We seem to be pretty mixed UP about UP.
To be knowledgeable about the proper uses of UP, look the word UP in the dictionary. In a desk-sized dictionary, it takes UP almost 1/4th of the page and add UP to about thirty definitions. If you are UP to it, you might try building UP a list of the many ways UP is used. It will take UP a lot of your time, but if you don’t give UP, you may wind UP with a hundred or more. When it threatens to rain, we say it is clouding UP. When the sun comes out, we say it is clearing UP.
When it rains, it wets the earth and often messes things UP. When it doesn’t rain for awhile, things dry UP.
One could go on and on, but I’ll wrap it UP, for now my time is UP, so………….
it is time to shut UP.


Courtesy: ROTARY NEWS-November 2010.

Friday, October 1, 2010

ராமனும் பாபரும் ஒண்ணுதான்னு சொல்லிட்டாங்க.

02/10/2010


அன்புள்ள இந்தியர்களே,

எதோ எல்லா ஊர்களிலும் அங்கங்கே நான் நின்று கொண்டிருப்பதால்
நீங்கள் என்னை மறக்கவில்லை என்று அறிய மகிழ்ச்சி.

ஜனவரி மாதம் குளித்தது. மேலெல்லாம் கசகசன்னு இருக்கு.
அப்பாடா, இன்னிக்குஎன்னை குளிப்பாட்டிட்டாங்க.
ஆளாளுக்கு ஒரு சிலைஉயர மாலை கொண்டு வந்து
என் முகத்தைக் கூட பார்க்காமல் மீடியா கேமராவைப்
பார்த்தபடி போட்டுட்டு போவாங்க. அது வாடி உதிர்ந்து
நாராகும் வரை என் தோள் வலி தாங்கமுடியாது.

ஆமா, அயோத்தி தீர்ப்பு வந்துட்டதாமே. ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே.

ராமனும் பாபரும் ஒண்ணுதான்னு சொல்லிட்டாங்க.

அடுத்த வருஷம் பார்க்கலாம்.

ஹே ராம்
என்றும் உங்கள்

Thursday, September 30, 2010

அக்டோபர் 2 அன்று பிறந்த இருவர் பெயர் பெற்றவர்கள்

அக்டோபர் 1 - இன்று பிறந்த இவருக்கு கிட்டத்தட்ட 290க்கு மேல் பெயர்கள்.

எல்லா பெயர்களையும் எழுத ஆசைதான். நினைவில் உள்ள பெயர்களை எழுதுகிறேன். பாக்கியை நீங்கள் சொல்லுங்களேன்.

குணசேகரன், பரந்தாமன், மனோகரன், சுந்தராங்கதன், பார்த்திபன், விக்ரமன், அம்பிகாபதி, கட்டபொம்மன், ரஹீம்,சிதம்பரம், சுந்தரம்பிள்ளை, சண்முகசுந்தரம், கன்னையா, காளிதாஸ், பத்மநாபன், ரெங்கன், பாபு, பரதன், கோபிநாத், ப்ரேம்நாத், ரெங்கதுரை,

சில சந்தர்ப்பங்களில் ஒரு மூன்று மணி நேரத்தில் இரண்டு, மூன்று, நான்கு, ஏன் ஒன்பது பெயர்கள் கூடப் பெற்றிருக்கிறார். அப்பா விழுப்புரம் சின்னையாவும் அம்மா ராஜாமணி அவர்களும் இவருக்கு இட்டது பிள்ளையார் பெயர்.

21/07/2001ல் மறைந்த இவர் பிறந்தநாளை தமிழ்நாடு முழுதும் இன்று நினைவு கூர்ந்து விழா நடக்கும்.

Monday, September 27, 2010

கலைஞருக்கு நன்றி

சென்ற மாதம் நானும் மகன் சோமுவும் திருச்சிக்கு காரில் சென்றோம். நால்வழி சாலையானதும் வழியில் எல்லா ஊர்களிலும் பைபாஸ் ஆனதால் தூரம் குறைந்தது போனது. மேலும் புதுப் புது கார்கள் எல்லாம் 140 - 160 கிமீ வேகத்தில் செல்கின்றன. பைபாஸ்ஸில் ஊர்களை ஒட்டி மாற்று வழி தெரிந்து கொள்ள முடியாமல் சில வண்டிகள்/பஸ் கூட வழி மாறி நாம் செல்லும் இடது லேனில் எதிராக வருகின்றன.

மேலூர் தாண்டி சிறிது தூரத்தில் வலது லேனில் சென்ற ஒரு மஹிந்திரா ஸ்கார்பியோ கவிழ்ந்து கிடந்தது. அருகில் ஒருவர் கீழே விழுந்திருந்தார். காரின் உள்ளே எத்தனை பேர் என்று தெரியாது. கூட்டம் சேரத் தொடங்கியது. கொஞ்சம் முன்னேதான் நடந்திருக்கும். சோமு உடனே தன் செல்லில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்தான். எந்த இடம் என்று சொல்ல அந்த ஊர் பெயர் தெரியவில்லை. லைனில் இருக்கும் போதே மாங்குளத்துப்பட்டி போர்டு பார்த்தோம். சோமுவின் பெயர் விலாசம் எல்லாம் கேட்டதும் ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம் என்றார்கள்.

சில வினாடிகளிலேயே சோமுவுக்கு ஃபோன். "நீங்கள் சொன்னது போல எங்களுக்கு இன்னொரு கால் வந்தது. ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லி விட்டோம்" என்றார். என்ன ஒரு நெட்வொர்க் பாருங்கள். அடுத்த நிமிடத்தில் ஆம்புலன்ஸ் எங்கள் எதிரே விரைந்தது.
விபத்துகளில் காயமடைந்தோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால் தான் உயிர் காக்க முடியும். சன் டிவியில் அரசு விளம்பரத்தில் வரும் பெண் சொல்வாளே? அது போல நானும் மனதில் "கலைஞருக்கு நன்றி" சொன்னேன்.

Friday, September 10, 2010

நான் நான்கு தருவேன், நீ மூன்று தா

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே, நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா"

சகாதேவன்

Sunday, June 20, 2010

"Yes Prime Minister"

அமெரிக்காவில் 2011ல் சில கம்பெனிகள் இருக்காது என்று நேற்று msn ல் பார்த்தேன். அதில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் ஒன்று. $500 மில்லியனுக்கு மேல் கடனாம். பிற நாடுகளிலிருந்து வெளிவரும் டைஜெஸ்ட் வரக்கூடுமாம். நியூஸ் வீக் கூட பிரச்னையில் இருக்கிறதாம்.

என்ன ஆச்சு?கம்ப்யூட்டர், இன்டெர்நெட் எல்லாம் வந்ததால் புத்தகம் வாங்கிப் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டதோ. நான் பழைய டைஜெஸ்ட் நிறைய வைத்திருக்கிறேன்.
உடனே ஒரு டைஜெஸ்ட் எடுத்து பார்த்தேன் (நவம்பர் 1989). அதிலிருந்து ஒரு செய்தி.

"Yes Prime Minister"
Harold Wilson recalls an audience with the Queen during his first term as Prime Minister, when the Prince of Wales was 19 years old.
I was telling the Queen that I was about to leave for Australia, to attend the memorial service for Prime Minister Harold Holt. The Queen asked me whether it would be a good idea if Prince Charles went with me. I thought it, an excellent proposal, so she called him in.
"Charles," said the Queen, "the Prime Minister has very generously said that he will take you to Australia. Now you will do exactly what he tells you. If he says, 'go to bed', you just go to bed even if you have to break off in the middle of a sentence."

இந்த மாதிரி இனி படிக்க முடியுமா?

Friday, June 4, 2010

"ஸ்ட்ரோமர்" இந்த ஆங்கில வார்த்தைக்கு ஸ்பெல்லிங் என்ன?

இந்த ஆண்டு Spelling Bee போட்டியில் 14 வயதான ஒரு இந்தியப் பெண் அனாமிகா வீரமணி, 273 போட்டியாளர்கள் கலந்து கொண்ட போட்டியில் வென்று $40000 பரிசாக பெற்றார்.




அனாமிகா ஸ்பெல்லிங் சொன்ன வார்த்தை "STROMUHR"


சென்ற ஆண்டும் காவ்யா சிவசங்கர் என்ற இந்தியப் பெண்ணே வென்றார். அப்போது நான் சிகாகோவில் இருந்ததால் காவ்யா பரிசு அறிவிக்கப் பட்டதும் அடைந்த மகிழ்ச்சியை டிவியில் பார்த்தேன்.

Tuesday, March 30, 2010

சன் குடும்ப விருதுகளும் என் குடும்ப விருதும்

சன் சீரியல்களில் தோன்றும் நடிக/ந்டிகைகளுக்கு, சிறந்த அம்மா, அப்பா, அண்ணன், மாமியார், மாமனார் என விருதுகளுக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
என் குடும்பத்தில் நான் ஒரு சிறந்த மகனோ, அண்ணனோ, தம்பியோ, கணவனோ, அப்பாவோ தெரியவில்லை. ஆனால் சிறந்த தாத்தா என்று என் பேரக்குழந்தைகள் நால்வரும் ஓட்டு போட்டு விடுவார்கள்.
நான் அவர்களுக்கு கதை சொல்லி, படம் வரைந்து, குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டி அவர்களோடு ஒருவனாக இருக்கிறேன். தாமரை, பேரனுக்கு சாக்லேட் தரும்போது "தாத்தாக்கு" என்று கேட்டு எனக்கு ஒன்று வாங்கி வ்ந்து த்ருவான்.
சினிமாவில் இப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்தால் என் தேர்வு.

சிறந்த அம்மா : கண்ணாம்பா.
இரண்டாம் இடம் -பண்டரிபாய்
சிறந்த அப்பா : அந்நாளில் அப்பாதுரைசாமி என்றேஅழைக்கப்பட்டவர்.
பராசக்தியில் கல்யாணியின் அப்பாவாக வருவாரே.
சிறந்த அண்ணன் : பாசமலர் சிவாஜி.
சிறந்த தங்கை : சாவித்திரி.

மாமனார், மாமியார் தம்பிக்கு நிறைய யோசிக்க வேண்டும். உங்கள் தேர்வை எழுதுங்களேன்

Tuesday, February 16, 2010

இந்த படங்களை பாருங்களேன்

ஈமெயிலில் நண்பர் பாலாஜி எனக்கு அனுப்பிய படங்களில் சில.



பண்டிகை நாளில் ரயில் பயணம்

இதற்கு வசனம் தேவையில்லை
master card accepted

Monday, February 1, 2010

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக்குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே

பசுவைத் தேடி கன்னுக்குட்டி
பால் குடிக்க ஓடுது
பறவை கூட இரையெடுத்து
பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
தாத்தா தெரியுமா
பாத்தா புரியுமா
தனித்தனியா பிரிஞ்சிருக்க
எங்களால முடியுமா
எங்களால முடியுமா
கோழி ஒரு கூட்டிலே......

அடுத்த வீட்டு பாப்பா இப்போ
அம்மா அப்பா மடியிலே
அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான்
சேர்த்து பார்க்க முடியலே
அம்மா மறக்கலே
அப்பா நினைக்கலே
அங்கும் இங்கும் சேர்த்து வைக்க
எங்களுக்கும் வயசில்லே
உங்களுக்கும் மனசில்லே
கோழி ஒரு கூட்டிலே...

டிவியில் "குழந்தையும் தெய்வமும்" பார்த்தேன். கணவன் மனைவி பிரிந்து வாழ, லல்லி, பப்பி என்ற இரட்டை குழந்தைகள், இங்கொன்றும் அங்கொன்றுமாக வளர்கின்றன. ஒரே பள்ளியில் படிப்பதால் இருவரும் திட்டமிட்டு இடம் மாறி அப்பா அம்மாவை சேர்த்து வைக்கிறதுதான் கதை.அத்தனை விஷயமும் இந்த பாட்டிலே இருக்கும்.

ஷிவானி வந்து, தாத்தா நான் போகோ பார்க்கணும், ரிமோட் கொடு என்றாள். இரும்மா இந்த பாட்டு முடிந்ததும் தந்து விடுகிறேன் என்றேன். அவளுக்கும் குட்டி பத்மினி பாடிய பாட்டு பிடித்திருந்தது. என்னுடன் முழு படம் பார்த்தாள்.

இப்போ குழந்தைகள் பார்க்கிற மாதிரி படமும் இல்லை. பாட்டும் இல்லை. "டாடி மம்மி வீட்டில் இல்லே, தடை போட யாருமில்லே.." எப்படி இந்த பாட்டு.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

Monday, January 25, 2010

இந்த விருது எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும்.


குடியரசு தினம். ஆண்டு தோறும் இந்நாளில் கலை, இலக்கியம், இசை, விளையாட்டு, விஞ்ஞானம் என்று பல துறை வித்தகர்களுக்கு,

பத்மஸ்ரீ பத்மவிபூஷன்

என்று விருது வழங்குகிறார்கள்.

எனக்கு 1971 லேயே கிடைத்த விருது என்ன தெரியுமா?

பத்மாபுருஷன்

எத்தனை பேருக்கு இப்படி ஒரு விருது கிடைத்திருக்கும்?

இந்த விருது கிடைத்த எல்லோருக்கும் என் பாராட்டுகள்