Sunday, November 24, 2013

கிட்டிவல் (Kiddival)

ஆண்டு தோறும் நடக்கும்  LKG முதல் 5ம் வகுப்பு  குழந்தைகளுக்கான போட்டி நேற்று சாரா டக்கர் கல்லூரியில் நடந்தது

குழந்தைகளின் வயது, திறமைக்கு ஏற்றவாறு
திருக்குறள் ஒப்பித்தல்,  க்ரேயான் கலரிங்,  ஆங்கிலம்/தமிழில் பேச்சுப் போட்டியும்  கையெழுத்து போட்டியும்,  பெயிண்டிங்,  வாய்ப்பாட்டு
வாத்திய இசை,   பரதநாட்டியம்,  குழு நடனம்,
ஃபாஷன் - பாய்ஸ்/கேர்ல்ஸ்  என்று பல போட்டிகள்.



1600+ மாணவ மாணவிகள், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து ந்து அசத்தினார்கள்.

காலை 9 மணிக்கு சீதாலக்ஷ்மி விஸ்வநாதன் அவர்கள்  தொடங்கி வைக்க, மாலை வரை நடந்த போட்டிகளில் சங்கர்நகர் ஜெயேந்திரா கோல்டன் ஜூபிலி, , இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மெட்ரிக், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றன.
எல்லா போட்டிகளிலும் நாலாவது  மார்க் வாங்கிய  குழந்தைகள்.  ஆறுதல் பரிசாக ஒரு கப் பெற்றார்கள்.  பரிசளிப்பு விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத் துணைவேந்தர் திரு.ஏ.கே.குமரகுரு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார்


குழந்தைகள் மேல் அளவற்ற பாசம் கொண்ட Rm.K..விஸ்வநாதன் 24 ஆண்டுகள் முன்பு தொடங்கிய கிட்டிவலை தொடர்ந்து, அவர் தம்பிகள் திருநெல்வேலி வெஸ்ட்,திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி கிளப் மெம்பர்களுடன் சேர்ந்து நடத்துகிறார்கள்.


ஆர்ரெம்கேவி நிர்வாகிகள் திரு.கே.மகேஷ் கோவையிலிருந்தும், என்.மாணிக்கவாசகம் சென்னையிலிருந்தும் வந்திருந்தார்கள்.

க்விஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த என்னை பார்த்த  க்விஸ் மாஸ்டர் திரு ஜான் சுதாகர், இவர்தான் என் முதல் க்விஸ் மாஸ்டர் என்று என்னை அவைக்கு அறிமுகம் செய்தார். 1982ல் நான் நடத்திய க்விஸ்ஸில் அவர் முதலாக கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்










2 comments:

ராமலக்ஷ்மி said...

படங்களுக்கும் விரிவான பகிர்வுக்கும் நன்றி.

ஆடிட்டோரியத்தின் முகப்பு இப்படி இருக்கவில்லை நாங்கள் படிக்கும்போது. அருமையான கோணத்தில் எடுத்திருக்கிறீர்கள்.

82 நிகழ்வில் நான் கலந்து கொள்ளாவிட்டாலும் நீங்கள் க்விஸ் நடத்த வந்திருந்தீர்கள் என்பது நினைவில் உள்ளது. அப்போது இளங்கலை முதலாம் ஆண்டில் இருந்தேன்:).

வெங்கட் நாகராஜ் said...

பகிர்வுக்கு நன்றி....

படங்களும் பகிர்வும் நன்று.