Friday, August 10, 2007

78 ; 45; 33 1/3 நினைவிருக்கிறதா?

இந்த பழைய இசைத்தட்டுக்களுக்கு 21ம் நூற்றாண்டைக் காட்ட அமெரிக்காவில் ஒரு முயற்சி. முந்திய டர்ன்டேபிள்(ப்ளேயர்) ஒரு ரேடியோ அல்லது ஒரு ஆம்ப்ளிபையரில் தான் இணையும். இப்போது புதிதாக கம்ப்யூட்டருடன் இணையும் டர்ன்டேபிள் வருகிறது. அந்த ரிகார்டுகளிலிருந்து ஹார்ட் டிஸ்க்கிற்கும் அதிலிருந்து எம்பி3 ப்ளேயரிலோ சிடியிலோ பதிவு செய்யலாம்.ஆயிரக்கணக்கில் உபயோகித்த அருமையான ரிகார்டு ஸ்டாக் வைத்துள்ள ஸ்டோர்கள் ஒரே மகிழ்ச்சியாக உள்ளன. ஒரு ஸ்டோர் உரிமையாளர் கூறுகிறார். ஒரு ரிகார்டை நான் ப்ளே செய்யும்போது கேட்பவர்கள் எல்லோரும் "சிடியில் கேட்பதைவிட நன்றாக உள்ளது. அந்த க்ரூவில் (groove)என்ன மந்திரம்?" என்று ஆச்சரியப்படுகிறார்கள். உண்மைதான். முன்னெல்லாம் ஆர்க்கெஸ்ட்ராவில் அத்தனை இசைக்கருவி வாசிப்பவர்களும் உண்டு. கருவிக்கேற்ற லோ /ஹை frequencyயில் பதிவாகும். இப்போதுதான் கீ போர்டு வந்துவிட்டதே. உங்கள் வீட்டில் பழைய ரிகார்டுகள் உள்ளதா? தூசி தட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

4 comments:

நானானி said...

என்னிடம் சில LP ரெக்கார்டுகள் மற்றும் ஊரில் எங்க வீட்டில் எல்லோருடைய கலெக்ஷன்ஸ் ஆக நிறைய 75ஸ்பீட் ரெக்கார்டுகள் உள்ளன். தகவலுக்கு நன்றி!
ஹையா...ஜாலி இப்ப.
8/8/ எப்படி கழிந்தது?

சகாதேவன் said...

நிறைய ரிகார்டு வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே. பத்திரம்
8/8 அன்று புது சட்டை. பிள்ளையார் கோவில் அருகில் இல்லையே என்று சங்கடமாய் இருந்தது. என் தங்கை ஈ மெயிலில் வாழ்த்துடன் பிள்ளையார் படம் அனுப்பினாள்
சகாதேவன்.

Anonymous said...

thank you for the information .all my favourite hindi hits 67-74 33 and 45 rpm are safely kept in a corner.
nunivaal.

cheena (சீனா) said...

தகவலுக்கு நன்றி சகா