Monday, February 4, 2008

சங்கீதம் அன்றும் இன்றும்

இன்று கே-டிவியில் நான் பார்த்த பழைய படம், "நான் பெற்ற செல்வம்".
'பூவா மரமும் பூத்ததே', 'மாதா பிதா குரு தெய்வம், 'நான் பெற்ற செல்வம்'
பாடல்களுக்காக எனக்கு மிகவும் பிடித்த படம். நான் முதன் முதலில் பார்த்துக் கேட்ட சினி ஆர்கெஸ்ட்ரா, இசை அமைப்பாளர் ஜி.ராமனாதன் அவர்களுடையதுதான். நெல்லை சங்கீத சபாவில் நடந்தது.
இன்று எல்லா இசைக்கருவிகளும் கீ போர்டில் வாசிக்கிறார்கள். அன்று நாலைந்து வயலின்கள்,ட்ரம்பெட்,க்ளாரினெட், வீணை, தபேலா, டோலக்,மிருதங்கம்,ட்ரம்ஸ் என்று அத்தனை கருவிகளையும் பார்த்ததே நன்றாக இருந்தது.
நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவர்ந்தவர் தபேலா வசித்த டி.பி.பைரவன் தான். சிரித்த முகத்தோடு அழகாக வாசித்தார்.
இன்று கேட்கும் பாடல்களில் நீலகண்டன் என்பவர் வாசிப்புதான் பைரவனை நினைவு படுத்துகிறது.

சகாதேவன்

3 comments:

நானானி said...

ஹாமாம்! சகாதேவன்!
என்னோட ஃபேவரைட்டும் ஜி.ராமநாதன் அவர்கள்தான். அவரது குழுவில் தபேலாதான் பிரதானம். ஒரு முறை நீங்கள் குறிப்பிட்ட பைரவன் வாசிப்பையே முன் வரிசையில் அமர்ந்து கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தேன். அதை கவனித்துவிட்ட அவர் கச்சேரி முடிந்ததும் தனக்குப் போட்ட மாலையை கிழிறங்கி வந்து என் கைகளில் தந்தார். மறக்க முடியாத தருணம் அது! காரணம் தபேலா எனக்கு மிகவும் பிடிக்கும்...வாசிக்கவும் ஆசை!
வணங்காமுடி படத்தில் 'என்னைப்போல் பெண்ணல்லவோ..' பாடலில் தபேலாவின் முத்தாய்ப்பு காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

நானானி said...

அவர் டி.பி. பைரவனா..?அல்லது டி.ராமச்சந்திரனா?

சகாதேவன் said...

டி.பி.ராமசந்திரனும் பைரவனும் சகோதரர்கள். ராமசந்திரன் டைரக்டர் ராமனாதனுக்கு உதவியாளர். பைரவன் தான் தபேலிஸ்ட். நீங்களும் நன்றாக ரசித்திருக்கிறீர்களே.
சகாதேவன்.