Wednesday, July 8, 2009

ஓட்டாத கார் இல்லை, இதுதானே பாக்கி

அநேகமாக எல்லா கார்களும் ஓட்டியிருக்கிறேன். இந்த காரை சிகாகோ Six Flags தீம் பார்க்கில் ஒரு ரவுண்ட் ஓட்டினேன்.



மேட்டுப்பாளையம், கன்னியாகுமரி, கொச்சின் இங்கெல்லாம் தீம் பார்க் உண்டு. நான் எங்கும் போனதில்லை. இங்கேதான் முதலில் பார்த்து பிரமித்து விட்டேன்.




என்ட்ரி டிக்கெட் 15 டாலர். நுழைவு வாயிலில் நம் பைகளை திறந்து பார்க்கிறார்கள். உள்ளே நிறைய ரெஸ்டாரண்ட். அதனால் நாம் வீட்டில் ஏதாவது செய்து, கொண்டு போகக் கூடாது என்கிறார்கள். சரிதானே. அங்கங்கே dust binகள் உள்ளதால் வழியெங்கும் சுத்தமாக இருக்கிறது.
கார் பார்க்கிங் சார்ஜ் 15 டாலர். எத்தனை கார்கள் நிற்கின்றன பாருங்கள். ஒரு காரில் நாலு பேரென்றாலும் எத்தனை பேர் இந்த நிமிடம் உள்ளே இருப்பார்கள். week endல் எப்படி இருக்கும்.

தீம் பார்க்கில் எந்த விளையாட்டுக்கும் தனி சார்ஜ் கிடையாது. மதுமிதா உற்சாகமாக எல்லாவற்றிலும் விளையாடினாள்.










ரோலர் கோஸ்டரில் மட்டும் நாங்கள் விடவில்லை. அவளுக்கு துணையாக நாமும் போகலாம் என்றால் எங்களுக்கு பயம். "ஆ.......", "ஓ......" என்று கத்திக்கொண்டு ( அப்போதுதான் பயம் இருக்காதாம்) கோஸ்டரில் செல்வதை பார்க்க நன்றாக இருந்தது.



என்னிடம் இப்படி பறக்கும் பஸ் கிடையாது

மதுவும் பாபுவும் ரயிலில்






இந்த Sky Trek Tower ல் உள்ள ரிங் சுற்றிக்கொண்டே மேலே வரை சென்று நமக்கு சுற்றிக்காட்டி இறங்குகிறது. அங்கிருந்து எடுத்த படங்கள்.


9 comments:

goma said...

முதல் படம் பார்த்தால் மோட்டார் சுந்தரம் பிள்ளை நினைவுக்கு வருகிறார்.

goma said...

அந்தக் காலத்தில் என் அக்கா கலெக்‌ஷன்
டின்க்கி டாய் கார்கள் கண் முன் ஓடுகின்றன.

goma said...

தாமரையைக் கூட்டிச் செல்லவில்லையா...

ராமலக்ஷ்மி said...

பறவையின் பார்வையில் அமைந்த இரண்டாவது படம் அருமை.

பேத்தி ரொம்ப க்யூட்டா இருக்காங்க.

சகாதேவன் said...

அந்த six flags படந்தானே?
எனக்கும் பிடிக்கும்

சகாதேவன் said...

கோமா,
மோட்டார் சுந்தரம்பிள்ளை, டிங்கி டாய்ஸ்:
பசுமையான நினைவுகள்.
இன்னொருமுறை எல்லோரும் போவோம்.தாமரைக்கு ரோலர் கோஸ்டில் போகணுமாம்

நானானி said...

// அங்கங்கே dust binகள் உள்ளதால் வழியெங்கும் சுத்தமாக இருக்கிறது.//

அப்படியெல்லாம் நம்மூரில் கட்டாயமில்லை.

நானானி said...

இதே மாதிரிதான் நானும் டிஸ்னிலேண்டில் கார் ஓட்டினேன்.

நானானி said...

// என் அக்கா கலெக்ஷன் டின்க்கி டாய் கார்கள் கண் முன் ஓடுகின்றன்.//

கொசுவத்தி...கொசுவத்தி சுத்துதே!!!கோமா!!