Sunday, July 12, 2009

விமானங்கள் பஸ்ஸுடன் போட்டி

சைனாவின் ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் பயணிகளை ஸ்டான்டிங் பயணிகளாக குறைந்த தூரப் பயணங்களில் தங்களது A320 விமானங்களில் ஏற்றி சென்றால் 40% அதிக பயணிகளை, 20% குறைந்த செலவில் அழைத்துச் செல்ல முடியும் என்று கருதுகிறது.

ஏர் லைனின் பிரெசிடென்ட், சைன டிவி பேட்டியில் சொன்னாராம். இதனால் குறைந்த கட்டணத்தில் பஸ்சில் செல்வது போல செல்லமுடியுமாம். என்ன, சீட் கிடையாது, லக்கேஜ் கொண்டுவரக் கூடாது, சாப்பாடு கிடையாது-தண்ணீர் கூட தரமாட்டோம்..

இந்த ஐடியா கொஞ்ச நாட்களாகவே பரிசீலிக்கப் படுகிறதாம். ஐரோப்பிய ஏர்பஸ் நிறுவனம் சேஃப்டி பெல்ட் எப்படி அமைப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது.

நம்ம ஊரிலும் இப்படி வந்தால் இனி தூத்துக்குடியிலிருந்து மதுரை, மதுரை - திருச்சி, திருச்சி - சென்னை உடனே செல்ல விரும்பும் பயனிகளுக்கு குஷிதான்

6 comments:

goma said...

மதுரை தூத்துக்குடி விமான சர்வீஸ் இனி பஸ் சர்வீஸ் மாதிரி என்னதான் யோசிச்சு பண்ணினாலும் வெள்ளரிக்கா,பால்கோவா முறுக்கு,இதெல்லாம் பார்க்க முடியுமா
கேக்க முடியுமா

goma said...

நம்ம ஊரிலும் இப்படி வந்தால் இனி தூத்துக்குடியிலிருந்து மதுரை, மதுரை - திருச்சி, திருச்சி - சென்னை உடனே செல்ல விரும்பும் பயனிகளுக்கு குஷிதான்


குஷிதான்.ஆனால் ட்ரெயின் டிக்கெட் கிடைக்கலை ,பஸ்ஸும் ஃபுல்லா ஆயிடிச்சு ..என்ற ரீதிதியில் யாரும் சாக்கு போக்கு சொல்ல முடியாது.அந்த மாதிரி நபர்களுக்கு நாட்குஷிதான்

தேவன் மாயம் said...

சீட் இல்லாமல் இருக்குமாங்க!!டவுன்பஸ் மாதிரி இருக்கும்..

சகாதேவன் said...

வாங்க கோமா,
நான் பஸ் ஓட்டுகிறவன். அதான் கொஞ்சம் பயம்.

தேவன் மாயம்,
நல்வரவு.
டவுன் பஸ்ஸிலும் சீட் ஃபுல் ஆனதும் ஸ்டான்டிங் தானே.

நானானி said...

எனக்கு ஒரு துண்டு போட்டு சீட் பிடிக்கவும்.

நானானி said...

அதும் ஜன்னலோரமா...சேரியா?